யார் இவர்கள்

அலெக்ஸாண்டர், சீசர், செங்கிஸ்கான், ஓட்டோமன், நெப்போலியன், குருச்சேவ் ராஜராஜசோழன், சந்திரகுப்தன், ராபர்ட் கிளைவ் என்பது பழம் வரிசை தளபதிகள்

மாபெரும் சாம்ராஜ்யத்தினை உருவாக்கியவர்கள் அல்லது காத்தவர்கள்

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த தளபதிகள் என உலகம் சிலரை கொண்டாடுகின்றது

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவினை வெல்ல வைத்த மெக் ஆர்தர்

வங்கப்போர் நாயகன் மானெக்ஷா

மிக சிறந்த போரியல் மேதை என கொண்டாடபடும் மோஷே தயான்

இப்படி பெரும் வரிசை இருக்க, தமிழகம் கண்ட தளபதி என்றொருவரை இன்று பாடி கொண்டிருக்கின்றார்கள்

கோமாளி ராமசந்திரன்கள் எல்லா காலத்திலும் தமிழகத்தில் இருந்து கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கொரு கூட்டமும் இருந்து கொண்டே இருக்கும்

அன்றே கேட்டான் தலைவன் எம்.ஆர் ராதா

“ஏண்டா டேய், தளபதின்னா என்னனெண்ணு தெரியுமா? எத்தனை போர் செய்தான் உங்கள் தளபதி? எத்தனை நாடுகளை வென்றான் சொல் பார்ப்போம்?

சும்மா தளபதி தளபதின்னு அந்த பேரை கெடுக்காத..”