அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்
இன்று எல்லோர் கையிலும் போன் இருக்கின்றது, பல வேலைக்காரர்கள் செய்ய வேண்டிய வேலையினை போனில் நம்மால் செய்ய முடிகின்றது
அதுவும் கணிணி யுகத்தில் பில் கட்டுவது முதல் கார் வரவழைப்பது வரை எத்தனையோ காரியங்களை செய்ய முடிகின்றது
ஆம் இன்றைய போனின் ஒவ்வொரு அப்ளிகேஷன்களும் ஒரு பூதம், அலாவுதின் விளக்கினை தேய்ப்பது போல தேய்த்துவிட்டால் வந்து ஆலம்பனா என நிற்கின்றது, சொல்லும் கட்டளைகளை திறம்பட நிறைவேற்றுகின்றது
இன்று அந்த அலாவுதீன் விளக்காக போனை நாம் கையிலே தூக்கி வைத்திருக்கின்றோம், இனி போன் இல்லா வாழ்வு நினைத்துபார்க்க முடியாத விஷயம்
இதற்கெல்லாம் அடித்தளமிட்டவர் அலெக்ஸாண்டர் கிராகம் பெல்.
சுவிஸில் பிறந்து கனடாவில் வளர்ந்தார். பெரும் படிப்பில்லை ஆனால் ஆராய்ச்சி மூளை இருந்தது
அக்காலத்தில் கம்பி தந்தி முறை இருந்தது, அதில்தான் சிக்னல் மூலம் தகவல் அனுப்பினார்கள். கிரகாம் பெல்லின் ஆராய்ச்சி அதில்தான் இருந்தது
சிறந்த பியாணொ வித்வானான பெல், பியாணாவின் இசைகளை அந்த தந்தி கம்பி மூலம் செலுத்தி நீண்ட தூரம் அனுப்பினார், அப்பொழுதுதான் பேச்சுகளை அனுப்பும் யோசனை அவருக்கு வந்தது
அது அவருக்கு சுலபமாக அமையவில்லை, பெரும் தொல்விகள் எல்லாம் வந்தன. ஆனால் அதிர்ஷ்டம் மனைவி வடிவில் வந்தது
ஆம் அவரின் மனைவி காது கேளாதவர், அதற்கான சிறப்பு வகுப்புகள், கருவிகள் என அவர் தேடும்பொழுது சில அட்டகாசமான கருவிகளின் நுட்பம் கிடைத்தது
இவை எல்லாம் கலந்துதான் அவர் தொலைபேசியினை அமைத்தார் ஆனால் முதலில் தெளிவான சத்தமில்லை, கடும் உழைப்பிற்கு பின் அது சரிவந்தது
இவ்வளவு சிரமபட்டு அவர் கண்டுபிடித்த தொலைபேசிக்கு வரவேற்பில்லை, ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கின்றது. மனிதர் சோர்ந்துவிட்டார். தன் உழைப்பெல்லாம் வீணாயிற்று என கருதி மனமொடிந்திருக்கின்றார்
பின் பிலடெல்பியாவில் ஒரு கண்காட்சியில் அவர் போனை கன்ட பிரேசில் பிரமுகர் ஒருவர்தான் அதன் பெருமையினை உலகெல்லாம் கொண்டு சென்றார், பின் உலகம் அங்கீகரித்தது
பிரான்ஸ் பெரும் தொகை கொடுத்து ஆராய்ச்சி மையம் எல்லாம் அமைத்து கொடுத்தது, பெரும் விஞ்ஞானியானார் பெல்
இன்னும் சில கருவிகளை கண்டுபிடித்தார், விமானம் உருவாக்கும் முயற்சியிலும் இறங்கினார். ஆனால் அது வெற்றி தரவில்லை
எடிசனை போலவே பெரும் ஆய்வக தொழிற்சாலையினை விட்டு செனறிருக்கின்றார் பெல். இன்றும் தகவல் தொழில்நுட்பத்தில் அதாவது ஒலியினை பரப்பிய கருவினை கண்டுபிடித்த அந்த பெல்லின் உழைப்பு கணிணி காலத்திலும் தொடர்ந்து வருகின்றது
இன்று மிக பிரபலமான AT & T என்பது அவர் தொடங்கி வைத்த நிறுவணமே
அந்த மாபெரும் மனிதனான கிராகம் பெல்லுக்கு இன்று பிறந்தநாள். கைபேசியின் தாயான தொலைபேசியினை படைத்த கர்த்தா அவர்தான், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி
மனிதர் தொலைபேசியினை கண்டுபிடித்தாலும் தன் மனைவியோடு போனில் பேசியதில்லை காரணம் அவர் மனைவிக்கு காது கேட்காது
அந்த வகையில் அவர் பாக்கியசாலி
அந்த உற்சாகத்தில்தான் இந்த ஆராய்ச்சியில் இறங்கி அவர் சாதித்திருக்கலாம். ஒருவேளை மனைவிக்கு காது கேட்கும் திறன் இருந்திருந்தால் அவர் இப்படி இறங்கியிருப்பாரா என்பது உலகில் உள்ள கணவன்மார்களுக்கெல்லாம் எழும் பெரும் கேள்வி
இன்னொன்று அவருக்கு மேனேஜர் என்பவரும் இல்லாமல் இருந்திருக்கலாம்
(ஐரோப்பியர் கொடுத்து வைத்தவர்கள் அவர்களுக்கு கிரகாம் பெல் கிடைத்திருக்கின்றார்.
நமக்கோ பிரேவ்பெல் ( வீரமணி), லவ்பெல் (அன்புமணி), பூல்சிட்டி பெல் (குளத்தூர் மணி) என்பது போன்ற பெல்கள்தான் கிடைத்திருக்கின்றனர் , நம் விதி அப்படி )