எதிர் கட்சிகள் நிலை
இந்த அரசு வேண்டாம், மோடி வேண்டாம் என பல குரல்கள் வருகின்றன
ஆனால் மோடிக்கு பதில் எதிர்கட்சியில் யார் இருக்கின்றார்கள்? தனித்து வெற்றிபெற்று அமரும் அளவு யார் உண்டு?
சரி கூட்டணி என்றாலும் ஒருமித்த கருத்து உண்டா? இவர் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்க முடியுமா? தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் மோடிக்கு மாற்று இவர் என யாரை சொல்கின்றார்கள் என்றால் பதிலே இல்லை
இங்கு மட்டுமல்ல, வெளிநாட்டு ஊடகங்களும் மோடிக்கு மாற்றாக இன்னொரு தலைவர் பெயரை சொல்ல இந்திய கட்சிகள் தயங்குகின்றன என்ற அளவுக்கு எழுத ஆரம்பித்தாயிற்று
மோடி வேண்டாம் என்றால் மாற்று யார்?
பாஜகவோ மோடி இல்லை என்றால் கட்காரி, ராஜ்நாத் சிங் என அட்டகாசமாக அடையாளம் காட்டுகின்றது
ஆனால் எதிர்கட்சிகள் நிலை மகா மோசம்
இதுதான் இப்பொழுது பாஜகவின் மிகபெரும் பலம், ஒற்றுமையில்லா எதிர்கட்சிகளின் சுயநல அரசியலில் பாஜக சிரிக்கின்றது
இந்த தேர்தலில் பாஜக பின்னடையலாம், அறுதி பெறும்பான்மை பெறாமல் போகலாம்
ஆனால் இந்த கூட்டணி இம்சைகள் செய்யபோகும் அழிச்சாட்டியத்தில் மீண்டும் பாஜக பெரும் பலத்தோடு வரலாம்
பாஜக வீழ்தபட வேண்டிய கட்சி என்பவர்களுக்கு அதை யார்? எப்படி வீழ்த்தபோகின்றார்கள் என சொல்ல தெரியாது என்பதுதான் சோகம்..