ஒன்றும் ஆச்சரியமல்ல
இது தேர்தல் திருவிழா நடக்கும் நேரம் பல வகையான விளையாட்டுக்கள், கூத்துக்கள் எல்லாம் நடக்கும், அது ஒன்றும் ஆச்சரியமல்ல
மேளம் அடிக்கும் வேலையினை பத்திரிகைகளும் டிவிக்களும் செவ்வனே செய்கின்றன
மக்கள் எனும் ஆடுகளை வெட்ட பல இடங்களில் மஞ்சள் தண்ணீர் தெளித்தாகிவிட்டது, அவைகளும் தலையாட்டி கொண்டு காத்திருக்கின்றன
திருவிழாவின் கடைசி நாளில் தீமிதிப்பார்கள், அது வரை கொண்டாட்டம்தான்
முதலில் ஜல்லிகட்டு நடத்தி தங்கள் பலம் காட்டினார்கள், விஜயகாந்த் என்ற காளை மட்டும் போக்கு காட்டியது , அதுவும் பின் அடங்கிற்று
ஆக முடிந்து கண்ணாமூச்சி ஆடினார்கள் அதுவும் முடிந்தது
சில இடங்களில் கரகாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் தொடங்கிவிட்டது, சில இடங்களில் பொய்க்கால் ஆட்டம், புலியாட்டம் எல்லாம் தொடங்கிற்று
வைகோவின் கம்பு சுற்றுதல் ஒரு பக்கம் நடக்கின்றது
இனி தேர் திருவிழா விரைவில் நடக்குமாம், ஸ்டாலின் சாமி கிளம்பிற்று, அது போக வானிலிருந்து மோடி சாமி, ராகுல் சாமி எல்லாம் வரும்
பழனிச்சாமி உற்சவம் ஸ்பெஷலாக பங்குனி உத்திரமன்று கிளம்பலாம்
அது ஒரு புறம் நடக்க வால்பிடுங்குதல் போட்டி நேற்று தொடங்கியிருக்கின்றது
கண்ணப்பன் என்ற வாலை திமுக பிடுங்க, திமுகவின் எந்த வாலை பிடுங்குவது என தெரியாத அதிமுக சரத்குமார் என்பவரை இன்று பிடுங்கி வாலாக சொருகி கொண்டது
இது போக கார்த்திக் என்றொரு வாலும் இன்று பிடுங்கபட்டிருக்கின்றது
ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது, விறுவிறுப்பாக சென்றுகொண்டிருகின்றது
அடுத்தடுத்த ஆட்டம் விரைவில் அறிவிக்கபடும், அநேகமாக தூத்துகுடியில் கரகாட்டம் களை கட்டலாம்