இலங்கையில் பறக்கும் தட்டுகளும் அந்நிய கிரகத்தாரும்

இலங்கையில் கொஞ்சநாளாக பறக்கும் தட்டுகளும் அந்நிய கிரகத்தாரும் வந்து போவதாக பல செய்திகள் உண்டு

அவை கட்டுகதை என ஒருசாராரும், திருடர்கள் பரப்பிவிடும் கதை என ஒருசாராரும் இல்லை உண்மையிலே அந்நிய கிரக சக்திகள் நடமாட்டம் என ஒரு சிலரும் சொல்லிகொண்டிருக்கின்றனர்

2 அடி உயர விசித்திர உருவங்கள் அடிக்கடி அங்கு இரவு தென்படுமாம், சாடுமாம், ஓடுமாம், கதவை தட்டுமாம் இன்னும் ஏகபட்ட அட்டகாசங்கள் செய்யுமாம்

ஆனால் எதுவும் அவை பேசுவதில்லையாம், உற்று பார்க்குமாம் அப்படியே ஓடிவிடுமாம்

அவை ஓடியபின் பார்த்தால் வித்தியாசமான காலடிதடம் இருக்குமாம்

ஆனால் அதை யாரும் பிடித்ததாகவோ, கட்டிவைத்ததாகவோ தகவல் இல்லை

இலங்கை அரசு இதைபற்றி முறைபடி அறிவிக்கவில்லை எனினும் செய்திகள் வந்தபடி உள்ளன‌

இது இன்னும் அங்கிள் சைமனுக்கு தெரியாது போல‌

தெரிந்தால் என்னாகும்? அன்னார் இப்படித்தான் பொளந்து கட்டுவார்

“அந்நிய கிரகம் ஒன்றில் ஏற்கனவே தமிழினம் உண்டு, முழுக்க தமிழர்கள். வேறு கிரகத்தில் எங்கெல்லாம் தமிழன் ஒடுக்கபடுவானோ அங்கெல்லாம் சென்று அவர்கள் போராட உதவுவார்கள்

அவர்கள்தான் பூமியில் ஒரு தமிழீழம் அமைக்க பிரபாகரனோடு போராடினார்கள், அவர்களுக்கும் அண்ணனுக்கும் போக்குவரத்து இருந்தது

நானே அண்ணனின் பறக்கும்தட்டில் ஏறி அவர்கள் கிரகமெல்லாம் சென்று அவர்கள் கிரகத்து ஆமை எல்லாம் உண்டிருக்கின்றேன்

இறுதியுத்தத்தில் அண்ணன் தப்பி அங்குதான் சென்றார், இப்பொழுது இந்தியாவில் என்ன ஆட்சி அமையும்? அதை பொறுத்து யுத்தம் தொடங்கலாமா? என ஆய்வு செய்ய அந்நிய கிரகத்தில் இருந்து தமிழீழ குள்ளர்கள் வந்திருக்கின்றார்கள், செய்தி சேகரித்து அண்ணனுக்கு கொண்டு செல்வார்கள்

இதெல்லாம் எனக்கும் அண்ணனுக்கும் சாதாரணம், அந்த வெளிகிரக தமிழர்கள் 3 அடிக்குள்தான் இருப்பார்கள்

அண்ணனே உயரம் குறைந்தவர், நான் கூட கேட்டேன் அண்ணே நீங்களும் அந்த கிரகத்துல உள்ளவரான்னு, அண்ணன் சொன்னார், எந்த கிரகம்னா என்னடா தம்பி, அதை பூரா தமிழன் ஆளனும்டா அதுதான் நம்ம இலக்குண்ணார்

“ஹாஹஹ்ஹஹ ஹஹஹஹஹா ஹ்ஹாஆஆஆஆ”