எளிய விவசாயி
இந்த விவசாயத்தினை பெரும் இலாபமான தொழிலாக செய்யும் ஒரே கட்சி அதிமுக ஒன்றுதான்
அன்று ஐதரபாத் தோட்டத்தின் விவசாய வருமானத்திலே சொத்துக்களை குவித்தேன் என சொன்னவர் ஜெயலலிதா
இன்று ஓபிஎஸ் மகனுக்கு ஒரே வருடத்தில் பல கோடிகள் சம்பாதிக்க முடிகின்றது
மற்ற எந்த கட்சியாலும் இது முடியாது, காரணம் அவர்கள் எல்லாம் புரட்சி தலைவனின் “விவசாயி” படம் பார்க்கவில்லை என்பதன்றி வேறு காரணம் இருக்க முடியாது
சில மாதங்களுக்கு முன்பு ஒபிஎஸ் தன் கிணற்றில் இருந்து குடிதண்ணீர் தரமறுக்கின்றார் என அவரின் பகுதிமக்கள் சொல்லிகொண்டிருந்தார்கள்
இவ்வளவு தீவிரமாக விவசாயம் செய்பவர் எப்படி கொடுத்திருக்க முடியும்? கொடுத்தால் இப்படி விவசாயம் காப்பாற்றபட்டிருக்குமா?
ஜெயா வழியில் ஆட்சி மட்டுமல்ல விவசாயமும் செய்கின்றது பன்னீர் செல்வம் குடும்பம்
இந்த எளிய விவசாயிக்கு இன்னும் பாரத ரத்னா வழங்கபடாதது பெரும் கொடுமையன்றி வேறென்ன?