கவனிக்கத்தக்க உழைப்பு
தேர்தல் களத்தில் ஒருமனிதரின் உழைப்பு நிச்சயம் அபாரமானது, கவனிக்கதக்கது
அவர் முக ஸ்டாலின், மிக கடுமையாக உழைக்கின்றார். 67 வயதிலும் சூறாவழியாக சுழன்று பிரச்சாரம் செய்வதும் , கூட்டத்தை திரட்டுவதிலும் அவரின் சுறுசுறுப்பு தனித்து தெரிகின்றது
இப்பொழுதெல்லாம் அவர் மேடைபேச்சில் நிதானம் தெரிகின்றது, நன்கு பழக்கபட்டுவிட்டார், குறிப்புகளோடு நறுக்கென்று பேசும் ஒரு பயிற்சியும் அவருக்கு வந்துவிட்டது
நாளெல்லாம் ஓட்டம், நிற்கும் இடமெல்லாம் பேச்சு என அவர் சுழல்வதால் தளர்ச்சி தெரிகின்றது , ஆனால் கூட்டத்தை கண்டதும் உற்சாகமாகிவிடுகின்றார்
அவருக்கு கூடும் கூட்டமும் கொஞ்சமல்ல
“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்பதை போல , “இன்று இல்லாவிட்டால் எப்பொழுதுமில்லை” என்பதை போல மாபெரும் கூட்டமும் அவரை வரவேற்கின்றது
ஒரு சில தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் 40/40 எனும் இலக்கினை அடையலாம் போலவே தெரிகின்றது
