விஷயமிருக்கின்றது

2010களில் எப் 16 விமானத்தை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கொடுக்கும் பொழுது மிக பெரும் கண்டனத்தை செய்தது இந்தியா

அதை கொடுக்கவே கூடாது என மல்லுக்கு நின்றது மன்மோகன் அரசு, பின் அமெரிக்கா பின்வாங்கி நிறைய பேச்சு நடந்து உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டும் ஜோர்டானில் இருக்கும் பழைய எப் 16 விமானங்களை பாகிஸ்தான் வாங்கலாம் என அமெரிக்கா சொன்னது

ஏன் சொல்கின்றோம் என்றால் விஷயமிருக்கின்றது

எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பின் பெரும் தளவாடங்களை குவிக்கின்றது பாகிஸ்தான், அதில் நிறைய இந்தியாவிற்கு ஆபத்தானவை

நாங்கள் தீவிரவாதிகளைத்தான் தாக்கினோம் , அதற்காக இப்படி நவீன ஆயுதங்களை அள்ளிகொடுத்தால் எமக்கு ஆபத்து என சீறவேண்டிய இந்தியா அமைதி காக்கின்றது

மல்லுகட்டவேண்டிய பாரதபிரதமர் காசியில் மக்கள் காலை பிடித்து வாக்கு கேட்டுகொண்டிருக்கின்றார்

பாகிஸ்தான் பலம்பெறுவதை தடுக்க வேண்டும், வருமுன் காக்க வேண்டும்

முன்பு மன்மோகன் அதை செய்தார், இந்த அரசு ஏனோ தூங்குகின்றது

ஒருவேளை அடுத்து வரும் அரசு அதை பார்க்கட்டும், நமக்கென்ன என இருப்பார்களோ?