பெருங்கொடுமை

கோவையில் 6 வயது சிறுமியினை கற்பழித்து கொன்றிருக்கின்றார்கள்

இதெல்லாம் இனி சட்டம் போட்டு தடுக்கும் கதையாக தெரியவில்லை, சீர்கேடுகள் வேறு எங்கோ இருக்கின்றன

சட்டத்தால் தடுக்க முடியாததை விழிப்புணர்வு மூலமாகத்தான் தீர்க்கமுடியும்

இச்சமூகத்தின் கடைசி சிறுமிக்கு ஆபத்து நிகழ்ந்தபின் யோசிப்பதை விட இப்பொழுதே உரிய திட்டங்களை தீட்டுதல் நலம்

அதற்கு முன் இந்த குற்றவாளிகளுக்கு மாபெரும் தண்டனை கொடுத்தே தீரவேண்டும்

கடும் பசியிலிருக்கும் விலங்குகள் கூட குட்டிகளை தொடுவதில்லை. இந்த கொடூரர்கள் அவைகளை விட மகா மோசம்

பத்திரிகை புலிகளையும், புலனாய்வு புலிகளையும் இங்கு காணவில்லை காரணம் பணமும் வராது, அரசியலும் செய்ய முடியாது

இப்படி ஒரு பெருங்கொடுமை பூமியில் எங்குமே இல்லை

பூக்கும் முன்னே கசக்கி எறியபட்ட அந்த மொட்டுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

பாழ்பட்ட இந்த பூமியில் நீ பிறந்ததாலும் உன்னை காக்க இச்சமூகம் தவறியதாலும் எங்களை மன்னித்துவிடம்மா என கதறிகொண்டிருக்கின்றோம்..

அழுதாலும் தீரா சோகத்தோடு அழுகின்றோம்..

மனசாட்சி கொண்ட மனிதர்களெல்லாம் உனக்காக அழுகின்றோம், அது ஒன்றைத்தான் எங்களால் செய்யவும் முடியும்

அந்த திசைபார்க்க அழுது கொண்டிருக்கின்றோம்

இதற்கொரு முடிவுகட்டாமல் இனி அழுகையினை இச்சமூகம் நிறுத்துதல் கூடாது

இதோ கோவை சிறுமி, 6 வயதுதான்

ஆசிபா போலவே கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றாள், ஆனால் ஒரு சத்தம் வரும்?

செத்தாலும் இங்கு சிறுபான்மை மதம், இனமாகத்தான் சாகவேண்டும் போலிருக்கின்றது