சகலமும் பிராப்ரஸ்து
“மகனே மோடி வருந்தாதே , உன் உளகுமுறலை எல்லாம் யான் அறிவேன்
தமிழ்நாட்ல என்னை மிகவும் திட்டுகின்றார்கள் சுவாமி
இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கண்டு கொஞ்சமும் பதறாதே, உன்னை இப்பொழுது ஹிட்லர் என்பார்கள் முசோலினி என்பார்களே
ஆமாம், அதேதான் ..
அதுதான் அவர்கள் வழக்கம் , உலக வரலாற்றை படித்து வைத்திருப்பது அவர்கள் பலம். அதனால் அப்படித்தான் அழைப்பார்கள்
அதிமுகவினர் அம்மா அப்பா என்றுதான் சொல்கின்றார்கள
ஆம் அவர்கள் பிள்ளையார் சாதி, பொம்மை போலவே இருப்பார்கள், அம்மா அப்பா தவிர ஏதும் தெரியாது
என்னை திட்டும் கோஷ்டிகளை என்ன செய்யலாம் சுவாமி.
ஒன்றும் செய்யவேண்டாம் மகனே, அடுத்த அமைச்சரவையில் அவர்களுக்கு இரு இடம் கொடுத்தால் போதும்
கொடுத்தால்?
உடனே உன்னை இந்தியாவின் பிஸ்மார்க், இந்தியாவின் கரிபால்டி என அவர்களாகவே வரவேற்று தமிழகத்திற்கு வெல்கம் மோடி என சொல்வார்கள்
நடக்குமா?
அவர்களுக்கு பதவி கொடுத்து சம்பாதிக்கவிட்டால் எல்லாம் நடக்கும்
அப்படியா?
முக்காலமும் அறிந்தவன் நான், இந்திராவினை ஹிட்லர் என சொல்லிவிட்டு பின் அவர் காலில் அவர்கள் விழவில்லையா? அட பாஜகவினையே சாமியார் மடம் என சொல்லிவிட்டு நம் அமைச்சரவைக்கு வரவில்லையா, அப்படி நிச்சயம் வருவார்கள்
அதனால் சொல்கின்றேன், தமிழக அரசியல்வாதிகளை பற்றி கவலையே படாதே, அவர்களை பற்றி நன்கு அறிந்த அந்த சிங்கள தளபதி பொன்சேகாவிடம் கேள் சரியாக சொல்வான் உன் மனமும் ஆறுதல் அடையும்
என்ன சொன்னான் அவன்?
தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என மிக சரியாக சொன்னவன் அவனே, அதை மனதில் வைத்து கொள்
நன்றி சுவாமி நன்றி
சகலமும் பிராப்திரஸ்து..”
