வரலாற்று இருட்டடிப்பு
கண்ணதாசன் காங்கிரஸில் இருந்த காலம், காமராஜரோடு சுற்றி கொண்டிருந்தார்
அவரை அருகிருந்து பார்க்கின்றார், நாளெல்லாம் மக்களுக்காக உழைக்கின்றார் , சரி இரவு என்ன செய்கின்றார் என பார்த்தால் விடியற்காலை 2 மணி வரை விழித்து உழைக்கின்றார்
அதிகாலை 5 மணிக்கு மறுபடியும் வேலையினை தொடர்கின்றார் காமராஜர்
இதை கவனித்த கண்ணதாசன் எழுதினார்
“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்தடா கர்னா வருவதை எதிர்கொள்ளடா”
பாடல் தொடர்கின்றது
“தாய்க்கு நீ மகனில்லை, தம்பிக்கு நீ அண்ணனில்லை
ஊர்பழி ஏற்றாயடா…”
ஆம் இரவெல்லாம் தூங்காமல் 11 வருடம் நாட்டுக்காக உழைத்த உத்தமனை நினைத்து கண்ணதாசன் அந்த வரிகளை எழுதினான்
இங்கு கண்டீர்களா?
வெறும் 11 மாதம் முதல்வராக இருந்த அண்ணா இரவெல்லாம் உழைத்தாராம்
எவ்வளவு வரலாற்று இருட்டடிப்புகள்??
கண்ணதாசனின் அந்த வரியினை மறுபடியும் படியுங்கள்
தம்பிக்கு நீ அண்ணனில்லை
ஆம் இங்கோ அண்ணா அண்ணா என அலற ஒரு கோஷ்டி இருந்தது, காமராஜருக்கு அதுவுமில்லை
