கல்வி புரட்சியா?
தமிழ்நாடு கல்வியில் முன்னேறிற்று, அது திமுகவின் சாதனை அதனால் பாஜக உள்ளே வரவே கூடாது வந்தால் மற்ற மாநிலம் போல ஆக்கிவிடுவார்கள் : திராவிட சேனை
இங்கு கல்வியினை காமராஜர் பெரும் வேகத்துடன் வளர்த்தார், 1967 வரை வளர்த்தார் அதன் பின் என்னாயிற்று?
1970களுக்கு பின்பகுதியில் இருந்தே தனியார் கல்வி நிறுவணங்கள் வந்தன, திமுக ஆட்சியில் கிறிஸ்தவ நிறுவணங்களுக்கு அனுமதி அள்ளி கொடுக்கபட்டது
வெள்ளைகாரன் ஆட்சியின் தொடர்ச்சியாக ஆங்கில பள்ளிகள்,கான்வென்டுகள், பன்னாட்டு பள்ளிகள் என அவர்கள் அள்ளிகுவிக்க திமுக துணைபோனது..
காமராஜரை சரித்துவிட்டு இதுதான் நடந்தது
கொஞ்சநாளில் கட்சிகாரனுக்கே கொடுத்தார்கள்,சாராயம் விற்றவன், கட்ட பஞ்சாயத்துகாரன், ஊர் சுற்றியவன் எல்லாம் கல்வி தந்தையானார்கள்
அதுவும் 1980களில் ராமசந்திரன் ஆட்சியில் நிலை மகா மோசம்
ஏகபட்ட பொறியியல், மருத்துவ கல்லூரிகள் மார்டன் ஆங்கில பள்ளிகள் அப்பொழுதுதான் வந்தன
விளைவு அரசு கட்டுபாட்டில் இருந்து கல்வி தனியார் மயமாயிற்று, மருத்துவமும் அப்படியே
தமிழகம் இவர்கள் ஆட்சியின் திறமையில் இப்படி மாறவில்லை, கல்வி மருத்துவ துறைகளை தனியாருக்கு விற்றார்கள் அல்லது தங்கள் பினாமிகளுக்கு மாற்றினார்கள்
இன்று எல்லா கட்சிகாரனுக்கும் இங்கு கல்லூரி, மருத்துவமனை அது இது என தனி அரசாங்கமே நடக்கின்றது
அத்தோடு விட்டார்களா சண்டாளர்கள்? சாதி சங்கங்கள் எல்லாம் கல்வி நிறுவணம் நடத்த வழிவிட்டார்கள், ஆம் வாக்கு வங்கி அரசியல்
சாதிவாரியாக கல்லூரிகள் வந்தன, இன்னும் என்னவெல்லாமோ வந்தது
சுயதொழிலும் தெரியாத, டிகிரி தவிர வேறு வேலை செய்ய தெரியாத கூமுட்டை தலைமுறை ஒன்றை உருவாக்கியது அதன் சாதனை..
மற்றமாநிலங்களில் இது இல்லை, நிச்சயமாக இல்லை
அவர்கள் மனசாட்சிபடி யோசிக்கின்றார்கள், இதெல்லாம் அரசு கடமை கல்வியும் மருத்துவமும் தனியாரிடம் சென்றால் மக்கள் பாதிக்கபடுவார்கள் என அஞ்சுகின்றார்கள்
அவர்களுக்கு மனசாட்சி இருக்கின்றது, தன் கட்சிக்காரன் சம்பாதிக்க மாநிலத்தை சூறையாடும் அநியாயத்தை அவர்கள் செய்யவில்லை
அதனால் அவை எல்லாம் பின் தங்கியது போலவும் இவர்கள் கொள்ளையடித்தும் முறைகேடாகவும் உருவாக்கிய சாம்ராஜ்யங்கள் கல்வி முன்னேற்றம் போலவும் காட்சியளிகின்றன
உண்மையில் அரசுடமையினை தனியாருடமை ஆக்கி கோடிகணக்கில் சம்பாதிக்க்க இவர்கள் செய்ததே இந்த கல்வி மருத்துவ பணி அன்றி வேறல்ல
இதனால் கொஞ்சமும் தரமில்லா பட்டதாரிகளை பிராய்லர் கோழியாக உருவாக்கிவிட்டார்கள், உதவாக்கரைகள் அதிகம்
பல்கலை கழகம் முதல் எல்லா இடங்களிலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றது
எவ்வளவுக்கு என்றால் ஜெயா இறந்தபின் சசிகலாவினை சந்திக்க சென்ற துணைவேந்தர்களும் கல்வி தந்தைகளுமே சாட்சி
எல்கேஜி முதல் மருத்துவகல்வி வரை பூராவும் தனியாருக்கு கொடுத்துவிட்டு அதில் கட்சிக்காரனும் கட்சியும் சம்பாதிக்க முழு வகை செய்த செயலுக்கு பெயர் கல்வி புரட்சியாம்
பச்சையப்ப முதலியாரும், அண்ணாமலை செட்டியாரும் இன்னும் ஏராள ஆதீனங்களும் சொந்த பணத்தில் கல்லூரி கட்டினார்கள்
சாரா டக்கர் முதல் ஐடா ஸ்கேடர் வரை லண்டனில் இருந்து பணம் கொண்டுவந்து கல்லூரி கட்டினார்கள்
அதில் எல்லாம் இலவசம்
இன்று அப்படியா? கல்வி தந்தைகள் எல்லாம் தேர்தலை நிர்ணயிக்கும் அளவு செல்வத்தில் புரள்கின்றார்கள்
இங்கு என்ன கல்வி புரட்சி நடந்தது என இனியாவது தெரிந்து கொள்வது தமிழகத்திற்கு நல்லது
நல்ல அரசு வரவேண்டும் இதை எல்லாம் நாட்டுடமை ஆக்க வேண்டும்
முன்பு தனியார் வசமிருந்த போக்குவரத்து முதல் வங்கி வரை அரசுகள் அரசுடமை ஆக்கிற்று
பல அரசர்களின் சொத்துக்கள் அப்படி பறிக்கபட்டன
அவ்வாறே இந்த இம்சை கல்விதந்தைகளின் சொத்துகளையும் பறித்து அவற்றை அரசுடமை ஆக்கினால் இவர்கள் செய்திருக்கும் கல்வி புரட்சி என்னவென தெரியும்