எமக்கு மகிழ்ச்சியே

நாலு பேர் வாழ்த்துகின்றார்கள் என்பதற்காக பச்சை பொய்களையும் எழுத முடியாது, நாலு பேர் கண்டிக்கின்றார்கள் என்பதற்காக உண்மையினையும் எம்மால் சொல்லாமல் இருக்க முடியாது

அதை எதிர்பார்த்து இவ்விடம் வரவேண்டாம்

எது மனதை தொடும் உண்மையோ அதை சொல்லிகொண்டே இருப்போம்

பூமியில் கூட பருவநிலை மாறும், சந்திரன் கூட தேய்ந்து வளரும், சூரியன் கூட இரவில் மறையும்

இது இயற்கையின் நியதி, அப்படியே எல்லா விஷயங்களிலும் உண்மையும் இருக்கும் அதன் மறுபக்கமும் இருக்கும்

நாம் அந்த ரகம், இயற்கையான மனம் என்றால் அப்படித்தான்

மற்றபடி நிரந்தரமாக இருப்பது எண்ணெய் விளக்கு, எவனோ அடிக்கடி ஏற்றும் தீபம், அப்படி நமக்கு எண்ணெய் ஊற்ற யாருமில்லை அது நமக்கு தேவையுமில்லை

எம் இயல்பிலே நாம் இருப்போம், , மழை வந்தால் நதி கலங்கத்தான் செய்யும்

அடிக்கடி மழைபெய்யும் காலத்தில் புது புது வெள்ளம் வரும் அது கலங்கித்தான் வரும், அதற்காக அது நதியின் பிழையன்று , காலத்தின் பிழை

கட்சி சார்பு, மத சார்பு, இனசார்பு, சாதி சார்பு என இங்கு எதுவுமில்லை அதை தேடி இங்கு வரவேண்டாம்

அதெல்லாம் இல்லா பைத்தியகாரன் இவன் என்றால் அப்படியே இருந்துவிட்டு போகின்றோம் அதில் எமக்கு மகிழ்ச்சியே..