தேர்தல் துளிகள் 01/04/2019(1)
“காச எடுத்து வீசு
கழுத பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு
அட உனக்கும் கூட வோட்டு..”

சனாதான தர்மத்தை திருமா வேரறுத்த அந்த தருணம்…

தூத்துகுடியில் துப்பாக்கி சூடு நடந்தபொழுது தாமதமாக அறிந்தேன் என பழனிச்சாமி சொன்னால் தவறாம்
ஆனால் பிரபாகரனின் அம்மா வந்தபொழுது நாளிதழ் மூலமே தெரிந்துகொண்டேன் என கலைஞர் சொன்னது நிஜமாம்
திருமா சிதம்பரம் கோவிலுக்கு வலிய சென்று பல்லிளித்திருக்கின்றார்
உடனே முட்டு கொடுப்பவர்கள் இதோ பார் தலித் புரட்சி யாவரும் சமம் என கிளம்பிவிட்டார்கள்
யாவரும் சமம் என யார் சொல்லவில்லை?
கடந்த இருமாதம் முன்புதான் சனதான தர்மத்தை வேறறுப்போம் என மாநாடு நடத்தினார் திருமா, அதில் இந்து கோவில்களை விகாரையாக்குவோம் என சவுடால் வேறு
இப்போது அவர்தான் ஆலயம் சென்றிருகின்றார்
அடேய் முட்டுகளா?
ஆலயம் அவரை தேடியதா? இல்லை அவர் வலிய சென்று மணி அடித்தாரா?
தோல்வி யாருக்கு என இன்னுமா தெரியவில்லை?
அவர் அவ்வளவு கொள்கைவாதி என்றால் , புத்தமத விரும்பி என்றால் ஈழம் சென்று சிங்களவனிடமும் ராஜபக்சேவிடம் அல்லவா ஆதரவு கேட்க வேண்டும்