சொத்து சேர்க்காமல் சென்ற அவன் உத்தமனே

சோ ராமசாமி சமூக விரோதி, சமூக நீதிக்கு ஆபத்தானவர் அயோக்கியர் என ஒரு கும்பல் சொல்கின்றது

அந்த மனிதன் கடைசிவரை உன்மையினை சொன்னான், அது திராவிட மோசடியோ ஈழ மோசடியோ கடைசி வரை உண்மையினை சொன்னான்

ஈழதமிழருக்கு துரோகம் செய்கின்றீர்கள் என ஜெயவர்த்தனேவிடம் வாதாடிய அவனேதான், ஈழபுலிகளின் அதிதீவிரவாதத்தையும் கண்டித்தான்

காங்கிரசின் பல தவறுகளை கண்டித்த அவன், பாஜகவின் மறுபக்கத்தையும் சாட தயங்கவில்லை

ஒரு விஷயம் கவனியுங்கள்

எவ்வளவோ எழுதியவன் பேசியவன் அவன் ஆனால் சொத்து என அந்த வீட்டை தவிர ஏதுமில்லை, கோடி கோடியாய் அவன் குவிக்கவில்லை

அவன் தேசியமும் தெய்வீகம் பேசினான் ஏழையாக வாழ்ந்தான்

ஆனால் பகுத்தறிவும் கடவுள் மறுப்பும் பேசிய பகுத்தறிவாளர்கள் குவித்த சொத்தின் மதிப்பென்ன?

பெரியார் விட்டுசென்ற சில கோடிகள் இன்று பல்லாயிரம் கோடிகளாக வளர்ந்திருப்பது எப்படி?

பகுத்தறிவு பேசியவர்கள் அவர்கள் வாரிசு எல்லாம் இன்று கோடிகளில் புரள்வது எப்படி?

சோ ராமசாமி அப்படி 16 தலைமுறைக்கு சேர்த்தானா? இல்லை தேசியமும் தெய்வீகமும் பேசிவிட்டு சேர்க்கத்தான் முடியுமா?

அவன் குடும்ப சொத்தையும் பகுத்தறிவு திராவிட சிங்கங்களின் சொத்து மதிப்பினை ஒப்பிட்டு பார்க்க முடியுமா???

மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்…

ஆம் அவன் உண்மையாக வாழ்ந்திருக்கின்றான்

போலி திராவிடமும் பகுத்தறிவும் பேசி பல்லாயிரம் கோடி சுருட்டியவர்களை விட உண்மை பேசி கடைசிவரை சொத்து சேர்க்காமல் சென்ற அவன் உத்தமனே