பல மொழிகள் கற்றல் வேண்டும்
இரு நாட்களாக இந்த சங்கரர், ராஜானுஜரை எல்லாம் படிகின்றேன்
அவர்களின் தத்துவம் ஓரளவு புரிகின்றது, முழுக்க புரியவில்லை கொஞ்சம் சிரமாயிருக்கின்றது
ஆனால் ஒன்று புரிகின்றது
அவர்கள் தமிழர்கள் ஆனால் சமஸ்கிருதம் கற்றிருக்கின்றார்கள்
அதை கற்றதாலேயே அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவினையும் ஒரு காலத்தில் கட்டி போட முடிந்திருக்கின்றது, மிக பெரும் ஆளுமை செய்ய முடிந்திருக்கின்றது
லத்தீனும் போர்த்துகீசிய மொழியும், ஆங்கிலமும் பேசிய கிறிஸ்தவர்கள் இங்கு வந்து தமிழ்படித்தே இங்கு ஆதிக்கம் செலுத்தினார்கள்
அந்த வணிகம் ஆட்சி என வந்த அரேபியர்களும் தமிழ்படித்தே ஆளுமை பெற்றார்கள்
அப்படி ஒரு காலத்தில் சமஸ்கிருதம் கசடற கற்ற இந்த மகான்களால் இந்தியா தமிழரை வணங்கி நின்றிருக்கின்றது
மாபெரும் எழுச்சியினை அவர்கள் இந்திய வரலாற்றில் கொடுத்திருக்கின்றார்கள்
அந்நியர் நம்மொழி படித்தால் தவறே இல்லை எனும் பொழுது நாமும் பலமொழி கற்றால் நிச்சயம் தவறில்லை
தமிழர் பல மொழிகள் கற்றல் வேண்டும் இந்தி உட்பட
அது அல்லாது அகில இந்திய ஆளுமைகள் இங்கு உருவாக முடியாது