காரணம் வரதட்சனை

அது 100 சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலம் என மார்தட்டுவார்கள், அறிவாளிகள் மிகுந்த மாநிலம் என சொல்லிகொள்வார்கள்

அப்படி கடவுளின் சொந்த மாநிலம் என சொல்லிகொள்ளும் கேரளாவில்தான் அந்த சாத்தானின் கொடூரத்தைவிட பெரும் கொடூரம் நடந்திருக்கின்றது

காரணம் வரதட்சனை

சில நகைகளுக்காக அப்பெண்ணை கொடுமைபடுத்தியிருக்கின்றார்கள், கொடுமைகள் எல்லாம் ஹிட்லர் ரகம்

அதைவிட கனத்த கொடுமை பின்னால் நடந்திருக்கின்றது இந்த இதயநோயாளிகள், மனசாட்சி மிக்கவர்கள் தொடர்ந்து வரவேண்டாம்

வரதட்சனைக்காக அந்த அப்பாவி பெண்ணை தாக்கியிருக்கின்றார்கள், அதுவும் சத்தம் கேட்க கூடாதென வாயினை கட்டி வைத்து அடித்திருக்கின்றார்கள்

அப்பெண்ணுக்கு உணவு கூட கொடுக்கவில்லை, இக்கொடுமை சில நாட்கள் தொடர்திருகின்றது, பட்டினி போட்டு வதைத்திருகின்றார்கள்

இந்நிலையில் அப்பெண்ணை அக்கம் பக்கத்திலுள்ளோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருகின்றார்கள்

மனதாலும் உடலாலும் சோர்ந்த அப்பெண் செத்துவிட்டாள்

முழு மற்றும் ஒரே காரணம் வரதட்சனை என்பதன்றி வேறல்ல‌

அந்த அப்பாவி பெண் அக்கொடுமையால் இங்கு வாழமுடியாமலும் பெற்றோரிடம் உண்மை சொல்லமுடியாமலும் ஏங்கி செத்துவிட்டாள்

அக்கொடுமை வாழவேண்டிய இளம்பெண்ணை கொன்றுவிட்டது

சபரிமலை என்றாலோ இந்துபெண் இஸ்லாமாக மதம் மாறினாலோ ஓடிவந்து நிற்கும் பிரணாயி விஜயன் இப்பொழுது மகா அமைதி

விஷயம் கேரளாவில் வெடிக்கின்றது, பெண்கள் அமைப்புகள் டிஜிபி முன்னால் போராடிகொண்டிருக்கின்றன‌

அப்பெண்ணை எப்படி கொன்றார்களோ அப்படி வரதட்சனைக்காக கொலை செய்த இந்த கணவனையும் அவனின் தாயினையும் கொல்ல வேண்டும் என கடும் கொந்தளிப்பில் இருக்கின்றது கேரளா

வரதட்சனை கொடுமை ஏன் வெளிநாடுகளில் இல்லை என்றால் முதல் விஷயம் அப்பெண் சுயமாக சம்பாதிக்கின்றாள், சிந்திக்கின்றாள்

“ஏண்டா டேய் இது வாழ்க்கை, உனக்கு என்னை தந்து சந்ததி பெருக்க நீதான் எனக்கு கொட்ட வேண்டும்

நான் என்ன மண்ணாங்கட்டிக்கு பணத்தோடு வந்து உன்னை மணக்க வேண்டும், அந்த பணத்தை தக்க முதலீடு செய்தால் காலத்திற்கும் வருமானம் வரும் தெரியுமா?

பின் நீ எதற்கு? மனைவிக்கு சோறுபோட தட்சனை கேட்கும் நீ ஒரு பிச்சைக்காரன்

விபச்சாரியிடம் கூட பணம் கொண்டு செல்லும் ஆண்களுக்கு, மனைவி நிறைய‌ கொண்டுவர வேண்டுமா?” என்ற அளவில் அவர்களின் கேள்வி இருக்கும்

இந்திய பெண்கள் சுயமாகவும் தெளிவாகவும் சிந்திக்கும் வரை, சொந்தமாக சம்பாதிக்கும் வரை, பெண்கள் வாழ்வில் பெற்றோர் தலையிடும் வரை இம்மாதிரி சம்பவங்களை தடுக்க முடியாது

அந்த அபலைபெண்ணுக்கு ஆழ்ந்த அஞ்சலி

மறுமுறை பிறந்து இக்கொடுமையில்லா நல்வாழ்வினை அவள் வாழட்டும்