ரஷ்யாவுக்கு ஏதோ சொல்லவருகின்றது அமெரிக்கா
இந்த துருக்கி என்பது ஐரோப்பாவில் ஒரே இஸ்லாமிய நாடு
ஆனாலும் கேந்திர முக்கியத்துவம் மற்றும் ரஷ்ய கருங்கடல் பக்கம் அது வருவதாலும் ஒரு காலத்தில் நேட்டோவில் அது சேர்க்கபட்டது
அதிலிருந்து அமெரிக்க விமானங்களும் ஆயுதங்களும் சரளமாக கிடைத்தன, இந்த எப்16 எல்லாம் தயக்கமின்றி கொடுத்தார்கள்
அரபு நாடுகளுக்கு நிகராக துருக்கியினை நிறுத்துதல் இன்னும் ஏக கணக்கு உண்டு
ஆனால் எர்டோகன் வந்ததில் இருந்து அமெரிக்க துருக்கி உறவு சரியில்லை தன் நாட்டில் நடந்த ராணுவபுரட்சிக்கெல்லாம் அமெரிக்கா காரணம் என எர்டோகன் நினைத்தார்
சர்ச்சை பல இடங்களில் வெடித்தது, ரஷ்யாவிடமிருந்து எஸ் 300 பாதுகாப்பு சிஸ்டத்தை எல்லாம் பெற்றது துருக்கி
இந்நிலையில் அமெரிக்க எப் 35 ரக விமானம் துருக்கிக்கு வழங்படுவது இழுபறியானது
ஆனால் இப்பொழுது வழங்குகின்றார்கள், எப் 35 உலகின் நம்பர் 1 ரக விமானம் என தற்போது அழைக்கபடுகின்றது, லாஹீன் மார்ட்டின் கம்பெனியின் அந்த நவீன தயாரிப்பினை துருக்கி பெறுவது உலக அரங்கில் சலசலப்பினை கொண்டு வந்திருகின்றது
அதை துருக்கிக்கு கொடுத்து ரஷ்யாவுக்கு ஏதோ சொல்லவருகின்றது அமெரிக்கா
வெனிசுலாவில் ரஷ்யா கால்வைத்தால் அமெரிக்க கரம் எங்கு நீள்கின்றது பார்த்தீர்களா?
புட்டீன் இதற்கெல்லாம் அஞ்சுவாரா?அவரின் இரும்புகால் வெனிசுலாவில் உறுதியாக பதிந்துகொண்டே இருக்கின்றது
