குழந்தைகளுக்கான புத்தக நாளாம்

இன்று குழந்தைகளுக்கான புத்தக நாளாம்

இப்போதுள்ள குழந்தைகளுக்கு வீடியோ கேம் , செல்போன் என பல சாபங்கள் கிடைத்துவிட்டன. அதனால் அவை படும் சிரமங்கள் ஏராளம் , அவைகளை தாண்டி அக்குழந்தைகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை அந்தோ பரிதாபம்

உடல்நல கேடு இன்னொரு புறம்.

ஆனால் 1980களின் குழந்தைகள் கொடுத்துவைத்தவர்கள், சிறுவர் புத்தகங்களும் வந்தன, கதை சொல்ல தாத்தா பாட்டிகளும் இருந்தனர்

அந்த வரம்பெற்ற குழந்தைகளுக்கு அம்புலிமாமா போன்ற புத்தகங்கள் இருந்தன‌

சிறுவர்மலர் போன்ற பத்திரிகைகளும் வந்தன‌

அந்த குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா போன்ற ஸ்பெஷல் கவிஞர்களும் இருந்தனர்

நிச்சயம் அது ஒரு பொற்காலம்