எப்படி இருந்தவர் கலைஞர்?

எப்படி இருந்தவர் கலைஞர்?

சிலம்பு செல்வர் ம.பொ.சி தனக்கே உரித்தான சிலப்பதிகார அறிவில் “மங்கல அணி” என்ற வரியில் கண்ணகி தாலி என சொல்லிவிட்டார்

அது மங்கல வாத்தியங்கள் இசைக்கும் அணியே தவிர தாலி என்பதல்ல என பலத்த ஆதாரங்களுடன் வாதிட்டார் கலைஞர்

அவர் நடத்திய இலக்கிய சுவாரஸ்ய போரில் அதெல்லாம் கால கல்வெட்டுகள்

அவரின் இலக்கிய அறிவு அப்படி இருந்தது, பூம்புகார் படத்து வசனமெல்லாம் பராசக்தி ரகம்

அவரின் மொத்த புகழையும் கெடுக்க அவர் மகன் வந்திருக்கின்றார், அவரின் உளரலை எல்லாம் கேட்டால் நல்ல திமுகவினருக்கும் தமிழ் உணர்வாளருக்கும் கோபமே வரும்

பெரும் அறசீற்றம் வரும், நாம் சொல்வது உண்மையான திமுகவினருக்கு

கண்ணகி மதுரையில் பிறந்தாராம்

அதைவிட கொடுமை

“சான்றோரும் உண்டு கொல்?” எனும் பாடலை கொலையாய் கொல்கின்றார் ஸ்டாலின்

“சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?
வை வாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’
என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன்”

அதாவது இங்கு சான்றோர்கள் உண்டோ? தெய்வமும் உண்டோ என அவள் கேட்கும் கேள்வி அது

கொல் என்பது தவறு கொல்? என வினவுவது சரி என்கின்றது இலக்கணம்

கொலு போன்ற வார்த்தையின் பாடலது , சான்றோர்கள் இங்கு கொலுவீற்றிருக்கின்றார்களா என அவையினை கண்ணகி கேட்கும் காட்சி அது

மிக உருக்கமான காட்சி, மிக நயமான சொல்லாடல்

அந்த அற்புத சிலப்பதிகாரத்தை
இங்கோ “சான்றோரும் உண்டு கொள்” என மதுரை கோனார் கடைக்கு சான்றோர்களை சாப்பிட அழைக்கின்றார் கலைஞரின் மகன்

எப்படிபட்ட இலக்கியவாதி கலைஞர், மபொசியின் சிலம்பு பற்றிய கேள்விகளுக்கு எப்படி எல்லாம் பதிலளித்தார்?

இவரோ கோனார் கடைக்கு உண்டு கொள் என அழைக்கின்றார்

“சான்றோர் உண்டு கொள்”, எந்த கடையில் உண்ண வேண்டும் என்றும் சொல்லி தொலையவில்லை

மற்றொரு சொதப்பல் கண்ணகி மதுரையில் பிறந்தாளாம், எப்படி இருகின்றது திமுகவின் புதிய சிலப்பதிகாரம்?

எப்படி இருந்தது திமுக?

அவர்களின் இலக்கிய அறிவு தமிழறிவு உலக அறிவு என்ன? எவ்வளவு பிரசித்தி?

கற்றவர்களும் தமிழறிஞர்களும் அறிவாளிகளும் கொண்ட மாபெரும் சபையாக அது ஒரு காலத்தில் இருந்தது

அப்படிபட்ட அந்த இயக்கம் இப்படி சந்தி சிரிக்கும் அளவு ஒரு தடுமாற்ற தலைவனை கொண்டு திரிவதை காலத்தின் கோலம் என்பதன்றி என்ன சொல்ல?

நாம் கட்சி சார்பானவர் அல்ல ஆனால் திமுகவில் அறிவாளிகளும், வாததிறன் மிக்கவர்களும் சிந்தனையாளர்களும் அதன் பெரும் அடையாளம்

அதிமுக எப்பொழுதுமே கோமாளிகளின் கூடாரம் , ஆனால் திமுக என்பது அந்நாளில் அறிவின் மண்டபம்

அது இப்பொழுது வீழ்ந்திற்று

ஒரு மாபெரும் சிந்தனை மண்டபம் ஒன்று சர்கஸ் கூடாரம் ஆகிவிட்டது

அந்த தமிழ்சபையின் ஒளி அணைந்துவிட்டது, நல்லோர் சிலர் உளரேல் அந்த சபையினை மீட்டெடுப்பீர்

அந்த விளக்கினை ஏற்றிவைப்பீர்..