நாகூர் ஹனிபா
இந்துக்களின் பக்தி பாடல்களை சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் கேட்பது ஒரு அழகு, ஜேசுதாஸின் குரலில் கேட்டால் தெய்வீகம்
இஸ்லாமியருக்கு அப்படி ஒரு பாடகர் இருந்தார் அவர் பெயர் நாகூர் ஹனிபா
பொதுவாக இஸ்லாமிய இசையும் பாடல்களும் அரபு சாயலில் இருப்பதால் பெரும்பாலும் உச்சஸ்தானி ராகங்கள்
நமக்கு இசை தெரியாது உச்சஸ்தானி, இந்துஸ்தானி, கிர்கிஸ்தானி ஆப்கானி எல்லாம் தெரியாது ஆனால் பொதுவாக அப்பாடல்கள் தொடக்கமே எட்டுகட்டையில்தான் வரும்
அதை பாடுவது சிரமம் அதை உருக்கமாக பாடுவது இன்னும் சிரமம்
அதை அட்டகாசமாக செய்தார் ஹனீபா, அவரின் வெண்கல குரலும் அந்த உருக்கமான சுதியும் அவருக்கு தனி இடம் கொடுத்தன
தமிழக இஸ்லாமிய பாடல்களில் அவரை மறக்கவே முடியாது
இப்பொழுது அல்ல எப்பொழுது கேட்டாலும் மனதை அப்படியே கட்டிபோடும் குரல் அது
இஸ்லாமிய பாடல்கள் போலவே கலைஞர் மேலும் அவருக்கு பற்று இருந்தது, தமிழகத்தில் திமுகவே தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கட்சி என்ற காயிதே மில்லத்தின் காலத்து நம்பிக்கை அவருக்கு இருந்தது
அந்த “பாளையங்கோட்டை சிறையினிலே” பாடல் அவ்வளவு பிரசித்தம், திமுகவின் திராவிட கீதமாக இருந்தது
திமுக மாநாடு என்றால் அழைக்காவிட்டாலும் வருவேன் என வந்து பாடுவார்
“இந்த விழாவிற்கு பல காரணங்களால் நான் மறந்துவிட்ட, நான் அழைக்காமலே வந்த அந்த ஹனிபாவினை வாழ்த்துகின்றேன்” என கலைஞர் சொன்ன காலங்களும் உண்டு
அவருக்கும் கலைஞருக்கும் இருந்த உறவு நெருக்கமானது
அல்லாவினை அடுத்து அவர் பாடிய ஒரே பெயர் கலைஞர்தான்
காலை நேர இஸ்லாமிய பாடல்கள், குறிப்பாக ரமலான் காலத்து பாடல்களிலெல்லாம் அவரின் நினைவு எந்த தமிழனுக்கும் வராமல் இருக்கமுடியாது
இசைமுரசு என்பது அவருக்கு பொருத்தமான பெயர்
அன்னாருக்கு நேற்று நினைவுநாள், அந்த அல்லாஹ் அவரின் ஆன்மாவிற்கு எல்லா நிம்மதியினையும் அருளட்டும்
