பிணம் எங்கோ அங்கு கழுகுகள் கூடும்

“பிணம் எங்கோ அங்கு கழுகுகள் கூடும்” என்பது பைபிள் வாக்கு

கச்சா எண்ணெய் எங்கு இருக்கின்றது அங்கு பிணம் விழுந்தாக வேண்டும், அங்கு நமக்கு பணம் வந்தாக வேண்டும் என்பது அமெரிக்க கொள்கை

ஆச்சரியமாக அமெரிக்க அரசின் சின்னமும் கழுகு

இது காலம் வரை அக்கழுகு எங்கெல்லாம் எண்ணெய் உண்டோ அங்கெல்லாம் பிணகுவியல் நடத்தியது

இப்பொழுது அந்த கழுகுக்கு ஆபத்தாக இரு கழுகுகள் வந்திருக்கின்றன, அதன் பெயர் ரஷ்யா

ஆம் ஆச்சரியமாக ரஷ்ய அரசின் அடையாளம் இரு கழுகுகள்

இரு கழுகுக்கு சமமான புட்டீன்
எங்கெல்லாம் அமெரிக்காவுக்கு எண்ணெய் சல்லி விலையில் செல்லுமோ அங்கெல்லாம் ஆப்பு வைத்து ரஷ்ய எண்ணெயின் மார்க்கெட்டை நிறுத்துவார்

சிரியாவில் அப்படி குதித்தார், வெனிசுலாவுக்கு வெள்ளைஅடிக்கின்றார்

இப்பொழுது லிபியாவிலும் கால் பதிக்கின்றார், ஈராக் போலவே அரசியல் குழப்பம் அமெரிக்காவால் தொடங்கி வைக்கபட்டு , எண்ணெய் அமெரிக்காவுக்கு கொள்ளை போகும் நாடு அது

மிக சரியாக “என்னடா இங்க சத்தம்?” என சில அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றது ரஷ்யா

விரைவில் ரஷ்ய கப்பலோ விமானமோ லிபியா பறக்கலாம்

ஆக ஒரு கழுகினை, இரு கழுகுகள் கொத்தி சண்டையிடுகின்றன‌

மறுபடியும் முதல் வரியினை படியுங்கள், அட்டகாசமாக பொருந்தும்

இயேசு பெருமான் மாபெரும் ஞானி என்பதும் காலத்திற்கும் நிற்கும் வார்த்தைகளை சொன்னவர் என்பதும் அழகாக புரியும்