மிக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்@07th April
இன்று ஆயிரம் கார்ட்டூன்கள் வரலாம், ஆனால் கார்டூன் மூலம் உலகை திரும்பி பார்க்க வைக்கமுடியும் என நிரூபித்த முதல் நபர் வால்ட் டிஸ்னி
பெரும் படிப்பில்லை, சர்ச்சில் கூட வேலை செய்ய லாயக்கில்லை என்றார்கள். அவரின் தொடக்க வாழ்வு அப்படி இருந்திருக்கின்றது
தவறினை சரியாக செய்தால் வெற்றிபெறலாம் என்பது போல தத்ரூப ஓவியங்களை கிண்டலாக சரியாக வரையவேண்டும் என அவர் வரைந்தார்
அப்படி வந்ததுதான் மிக்கி மவுஸ்
அந்த மிக்கி மவுஸ் உலகத்தை கலக்கியது கொஞ்சமல்ல, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரும், ஸ்டாலினும் ராணுவத்தால் உலகை முற்றுகையிட்டபொழுது தன் கார்ட்டூன்களாலும் உலகை முற்றுகையிட்டவர் டிஸ்னி
பெரும் புகழும் பணமும் அவருக்கு கொட்டின, உலகமெல்லாம் இன்று கொடிகட்டி பறக்கும் கேளிக்கை நிலையமான டிஸ்னிலேன்ட் அப்படி அமைக்கபட்டது
அந்த மாபெரும் கேளிக்கை சாம்ராஜ்யம் அமைய அவருக்கு வழிவிட்டது அவரின் மிக்கி மவுஸ்
சில நாடுகள் மத, கலாச்சாரபடி எலி அருவெருப்பானது, இதனை அனுமதிக்கமுடியாது என சொன்னாலும் மக்கள் ரகசியமாக ரசித்தார்கள்.
பின்னாளில் மாபெரும் சாம்ராஜ்யத்தை டிஸ்னி அமைக்க அந்த மிக்கி மவுஸ்தான் காரணம், அந்த எலிதான் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை அமைத்தது
அந்த மிக்கிமவுஸ் உலகிற்கு அறிமுகமான நாள் இது, அதன் பின்னும் டொனால்ட் டக் போன்ற பாத்திரங்களை டிஸ்னி கொடுத்தாலும் வரலாற்றில் நின்றுவிட்டது மிக்கி
அந்த மிக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
