திமுகவுக்கு என்ன தயக்கம்?
அன்றொரு நாள் அடைந்தால் திராவிட நாடு எனும் மாபெரும் லட்சியத்தில் இருந்து திமுக பல்டி அடித்ததோ அப்படி ஒரு காட்சி இப்பொழுது நடக்கின்றது
இந்த திமுக திகவின் நாத்திகம் திராவிடம் இன்னபிற எல்லாம் கொள்கைபிடிப்போ இல்லை புரட்சி சிந்தனையோ அல்ல எல்லாம் உள்நோக்கம் கொண்ட அரசியல், நுட்பமான அரசியல்
அவர்கள் அப்படித்தான் கொள்கை என்பார்கள் உறுதி என்பார்கள் ஆனால் அவர்களின் வாக்குக்கு ஆபத்தென்றால் இல்லை பதவி கிடைக்க பல பல்டி அடிப்பார்கள்
உதாரணம் திராவிட நாடு முதல் பாஜக கூட்டணிவரை ஏகபட்டது இருக்கின்றது
அப்படி இப்பொழுது அடிக்கும் பல்டி “திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல” இதை அவர்களும் அலறியபடி சொல்ல துணைக்கு அவர்கள் அடிமைகளான தமிழக காங்கிரசையும் சேர்த்துவிட்டார்கள்
நானும் பிராமணன் ராமர் கோவில் கட்டுவதை தடுக்கமாட்டேன் என சொல்லிதிரியும் தலைவரின் காங்கிரசும் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என சொல்ல கடும் பாடு படுகின்றனர்
கேட்டால் இந்துக்கள் ஆலயங்களுக்கு திமுக ஏராளம் செய்ததாம்? எது சிலை திருட்டா?
மன்னர்களின் கட்டுபாட்டில் இருந்த ஆலயம் அரசுக்கு சென்றபின் திமுகதான் செய்யவேண்டும் இதில் என்ன ஆச்சரியம்?
அவர்கள் ஆட்சியில் ஏராளமான கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டதும் பல சிலைகள் களவாடபட்டு மிக அதிகமான சிற்றாலயம் அழிந்ததும் உண்டு அதுதான் ஆச்சரியம்
திமுக இஸ்லாமியரையும் கிறிஸ்தவரை ஒருமாதிரியும் இந்துக்களை ஒருமாதிரியும் நடத்துவது கண்கூடு
ராமனை ஆரியன் என்றும், ராவணனை முப்பாட்டன் என கொண்டாடும் கூட்டம் அது, திமுகவின் அடிநாதமே இந்துமத எதிர்ப்பு
இந்துமதத்தை தொட்டால் பிராமணரை ஆதரிக்க வேண்டும் என்ற ஒருவித வன்மத்திலே அம்மதத்தை எதிர்த்தது திமுக
அதை சரிக்க எவ்வளவு துணைபோக முடியுமோ அவ்வளவு போனது, இந்த அல்லேலூயா உட்பட பல கோஷ்டிகளுக்கு முழு ஆதரவு திமுக ஆட்சியும் அதுவுமே
அவ்வளவு ஏன் இன்றுவரை தீபாவளி உட்பட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல அவர்களுக்கு மனமே வராது
இந்துமதம் என்பதை தங்கள் அரசியலுக்கான ஆயுதமாக கண்டார்களே தவிர வேறொன்றுமில்லை
வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அம்மதத்தை சீண்டுவதும் கலாய்பதுமாக இருந்தவர்கள் அவர்கள், யாரெல்லாம் இந்துமத விரோதியோ அவர்களை எல்லாம் தயக்கமின்றி அருகில் அமர்த்தினார்கள்
அதற்கெல்லாம் என்ன அர்த்தம்?
இப்பொழுதும் பாருங்கள் ராதாரவிக்கு தண்டனையாம் வீரமணிக்கு கண்டனமாம்
கேட்டால் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லையாம், அதே நேரம் ஆதரவாளார்களா என்றால் சத்தமே இல்லை
அவ்வளவு இந்து அபிமானிகள் இந்து ஆலயங்களுக்கு சென்றால் என்ன? குங்குமம் விபூதி வைத்தால்தான் என்ன?
இந்துக்களின் மகிழ்ச்சியில் பங்குகொண்டு அவர்களின் விழாக்களில் பங்குபெற்றால்தான் என்ன?
சோனியாவும் மோடியும் டெல்லி ராம்லீலா நிகழ்வில் கலந்துகொள்வது போல இங்கிருக்கும் தேரோட்டங்களில் கலந்தால் என்ன?
இந்துக்கள் திமுகவிடம் கேட்பது தங்களுக்கான அங்கீகாரம் , தங்கள் தெய்வத்தை தவறாக பேசினால் கண்டிக்கும் ஒரு பாதுகாப்பு
பெரியார் சிலை என்றவுடன் திமுகவினர் பொங்குவது போலத்தானே ஆண்டாண்டு காலமாய் கொண்டாடும் தெய்வங்களை திக திமுகவினர் சீண்டினால் அவர்களுக்குக்கும் இருக்கும்
இந்துக்களின் உணர்வுகளை திமுக இன்னும் புரிந்துகொள்ளவில்லை
பிரமாணரும் மாறிவிட்டனர் பழைய காலங்கள் இப்பொழுது இல்லை
யூத குருக்கள் மாறியது போல, கமால் பாட்சாவுக்கு பின் துருக்கி இஸ்லாமியம் மாறியது போல அவர்களும் மாறிவிட்டார்கள்
ஆனால் அதற்கேற்றபடி மாறவேண்டிய திமுக இன்னும் மாறாமல் வசந்தசேனை நடிப்பினை நடத்திகொண்டிருக்கின்றது
இது பெரியார் மண் என்பதெல்லாம் சும்மா
ஜெயா பகிரங்கமாக கோவிலுக்கு சென்றார், வழிபாடு நடத்தினார் அவருக்கு ஆதரவு கூடிற்றே தவிர கொஞ்சமும் குறையவில்லை கடைசி வரை இல்லை
ஆம், ஆன்மீக தலைவர்களை இந்த மண் அவ்வளவு நேசிக்கின்றது இன்னும் நேசிக்கும்
திமுக அரசியலில் நீடிக்க விரும்பினால் அது இந்துமதத்தை மதிக்கட்டும், இந்து மக்களின் ஆலயங்களுக்கு செல்லட்டும் அவர்கள் மகிழ்வில் பங்குபெறட்டும்
அவர்கள் விரும்புவதெல்லாம் அதுதான், அது ஒன்றுதான்
மாறாக தேர்தல் என்றால் பம்முவதும் தேர்தலுக்கு பின் ஒருமாதிரி இந்துக்களை சீண்டுவதுமென்றால் திமுக பலத்த வீழ்ச்சியினை சந்திக்கும்
அட ஸ்டாலினை விடுங்கள் , நயந்தாரா காலில் எல்லாம் கேமரா முன் விழுந்துகிடக்கும் மூன்றாம் கலைஞர் கோவிலுக்குள் சென்று தெய்வத்தின் முன் விழமாட்டாரா?
இவர்களின் உண்மையான சிக்கல் என்ன தெரியுமா?
இந்து என்ற உணர்வு இங்கு வந்துவிட்டால் இந்திய உணர்வு மேலோங்கும், தேசிய உணர்வு பெருகும். வடக்கையும் தெற்கையும் இணைக்கும் மிகபெரும் பாலம் இந்துமதம்
இந்துமதத்தை அனுமதித்தால் சமஸ்கிருதம் படிப்பார்கள் வடக்கே தெற்கே பெரும் இணைப்பும் எழுச்சியும் ஏற்படும் இந்த திராவிட பிரிவினை அரசியல் மறையும்
தமிழக இந்துக்கள் தன்னை இந்து என நன்றாக உணரும் பட்சத்தில் இந்திய ஒற்றுமை மேலோங்கும்
இதனால்தான் திமுக இந்துஎதிர்ப்பினை பிடித்து தொங்குகின்றது , அன்றே அவர்களுக்கு எங்கிருந்தோ கிடைத்த கட்டளை அது , தமிழகத்தை இந்துக்கள்பால் விடாதே , அந்த நெருப்பை அணையாமல் பிடி ஒரு காலத்தில் தமிழகம் இந்தியாவில் இருந்து பிரியும்
இந்துக்களை திமுக ஏற்றுகொண்டால் தமிழகம் தேசியம்பால் திரும்பும் அல்லவா? பின் எப்படி இவர்கள் இந்துமதத்தை ரசிப்பார்கள்?
அதனால் சொல்கின்றோம் தேர்தல் கால பசப்புரைகளில் பொய் வாக்குறுதிகளில் திமுக ஏதோ சொல்லிகொண்டிருக்கின்றது
உண்மை என்றால் தன் நாத்திக கொள்கையினை கைவிட்டுவிட்டு ஆலயம் சென்று சுவாமி தரிசனம், தேர் இழுத்தல் போன்ற காரியங்களை அவர்கள் செய்யட்டும்
அதன்பின் நம்பலாம், 5 ஆண்டு கழித்து மெதுவாக இந்துக்கள் அவர்களை நம்பி வாக்களிக்கலாம் ஒன்றும் கெட்டுவிடாது
ஆனானபட்ட ரஷ்யாவே தங்கள் பின்னடைவுக்கு காரணம் கடவுள் மறுப்பு கொள்கை என்பதை உணர்ந்து பின் ஆலயங்களை திறந்து வழிபாடு செய்தபின்புதான் இன்று பலம்பெற்றிருக்கின்றது
அதை அவர்கள் மனமார நம்புகின்றார்கள்
ரஷ்யாவே மனம்திரும்பிய பின் இந்த திமுகவுக்கு அதுவும் நாத்திகத்தை எந்த ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கினார்களோ அந்த திமுகவுக்கு என்ன தயக்கம்?