இப்போதைக்கு ஓயாது..

ஆளாளுக்கு சண்டை செய்வோம் என வாக்குசாவடி நோக்கி ஓடுகின்றார்கள்

இது எல்லோருக்கும் கொடுக்கபடும் வாய்ப்பு, இதில் என்ன சண்டையினை கண்டார்களோ தெரியாது

சண்டை செய்வோம் என பாகிஸ்தான் பார்டருக்கோ சீன எல்லைக்கோ அட ராஜபக்சே திருப்பதி வரும்பொழுதோ ஒருவனும் செல்வதாக தெரியவில்லை

அவன் வோட்டை அவன் செலுத்துவது எப்படி சண்டை?

இதற்கெல்லாம் காரணம் யார் தெரியுமா?

கலைஞர் கருணாநிதி

“இதோ போர்களம் வா உடன்பிறப்பே, குத்தீட்டி வீசு, கேடயமாய் நில், வாளை சுழற்று எதிரி படையினை நாசமாக்கு, அவன் கோட்டையினை உடைக்கும் கல்லாய் இரு” என அன்றே எழுதி எழுதி உசுப்பியவர் அவர்தான்

சாதாரண தேர்தலை இரண்டாம் உலக யுத்தம் அளவுக்கு எழுதியே பெரும் பிம்பம் காட்டியவர் அவர்தான்

அது இப்போதைக்கு ஓயாது..மனிதர் செய்து வைத்திருக்கும் அழிச்சாட்டியம் அப்படி