ரஷ்யா சிரியா உறவில் பெரும் உரசலை செய்திருக்கின்றது மொசாத்
ரஷ்யா சிரியா உறவில் பெரும் உரசலை செய்திருக்கின்றது மொசாத், ஆனானபட்ட புட்டீனுக்கே தண்ணி காட்டியிருக்கின்றது
ஆம் மகா சுவாரஸ்யமான சம்பவம் அது
அதாவது இந்தியாவின் புகழ்பெற்ற உளவாளி ரவீந்த கவுசிக்கினை போலவே இஸ்ரேலில் ஒருவர் உண்டு அவர் எலி கோகன்
மனிதர் 1955களில் சிரியாவில் ஊடுருவி சிரிய அரசில் சேர்ந்து சிரிய பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை அதிகாரியுமானார்
தகவல் எல்லாம் இஸ்ரேலுக்கு அட்டகாசமாக கடத்தினார்.
மிக பெரிய விஷயம் இது, ஒரு உளவாளி எதிரி அரசு ராணுவத்தின் ஆலோசகராக அமர்த்தபடுவது பேராச்சரியம்
மொசாத்தை தவிர யாருக்கு அது சாத்தியம்
அவரை வைத்து கொண்டு சிரியா யுத்தம்செய்தால் என்னாகும்? எல்லாம் நாசமானது சிரியாவின் கோலன் பகுதி இஸ்ரேலுக்கு சென்றது
எனினும் ஒரு கட்டத்தில் யாரோ போட்டு கொடுக்க அவரை அடையாளம் கண்ட சிரியா தீரா கோபத்தில் தூக்கிலிட்டு கொன்றது
அவரின் தூக்கை தடுக்க இஸ்ரேல் போராடியது அந்த பாட்டி கோல்டா மேயரும் , மோசே தயானும் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை
உளவாளி சிக்கினால் அப்படித்தான், உளவு உலகம் ஒருவழி பாதை போனால் திரும்ப முடியாது.
அவரின் உடல் சிரியாவில் அடக்கம் செய்யபட்டு அவரின் பொருட்கள் ஆவணமாக காக்கபட்டது, இது நடந்தது 1965
முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு என ஒரு கட்டத்தில் “எஸ், ஹி இஸ் அவர் ஹீரோ” என ஒப்புகொண்டு அவரின் எலும்புகளையும் பொருட்களையும் கேட்டது
சிரியா கொடுக்கவில்லை, விவகாரம் இழுத்து கொண்டே சென்றது,
இந்நிலையில் கடந்த மே மாதம் திடீரென மாபெரும் விழாவினை அறிவித்தது இஸ்ரேல் அதாவது எலி கோகன் கொல்லபட்ட அந்த 18 மே அல்லது பங்குனி 18ல் அவருக்கு அஞ்சலி செலுத்தி இதோ எலி கோகனின் எலும்புகள் இதோ அவரின் வாட்ச் உட்பட பொருட்கள் என அறிவித்தார் நேதன்யாகு
தங்கள் நாட்டின் மாபெரும் ஹீரோவான எலி கோகனின் அடையாளாங்களை மொசாத் அட்டகாசமாக எடுத்து வந்ததிலும் நேதன்யாகுவின் திறமையிலும் இஸ்ரேல் அகமகிழ்ந்து கண்ணீர் விட்டது
நேதன்யாகு வெல்ல இதுவும் காரணம்
சிரியா கடும் வெறுப்பில் இருந்தது, மாபெரும் துரோகியின் எலும்பை கூட காக்கமுடியாதாவர்களா நாம் என உறுமியது எனினும் உள்நாட்டு போர் காலத்தில் இஸ்ரேல் களவாடியது என நிறுத்திகொண்டார்கள்
ஆம் அந்த போர்தான் காரணம்
இப்பொழுது இந்த மாபெரும் சாகசத்தை வைத்து அரசியல் செய்கின்றது இஸ்ரேல்
சில தினங்களுக்கு முன்பு தன் வெற்றி கொண்டாட்டத்தை சிரியா மேல் ஏவுகனை வீசி கொண்டாடினார் நேதன்யாகு
ஆனால் சிரியா நம்பிய ரஷ்யாவின் எஸ் 400 சாதனமோ இல்லை ரஷ்யா ஆதரவோ கைகொடுக்கவில்லை
எஸ் 400 நிறுவ தாமதம் என சொன்னாலும் தாக்குதலுக்கு ரஷ்யா பலத்த எதிர்ப்பை காட்டாத கோபத்தில் இருக்கின்றது சிரியா
சிரியாவுக்கு ரஷ்யா மேல் ஒரு சின்ன அதிருப்தி கிளம்பும் நேரம் அட்டகாசமாக துருப்பு சீட்டை வீசுகின்றது இஸ்ரேல்
“அது எப்படி ரஷ்யா வரும்? எலி கோகன் எச்சங்களை எம்மிடம் கொடுத்ததே அவர்கள்தானே, பதிலுக்கு நாங்கள் உக்ரைன் பக்கம் ஜார்ஜியா பக்கம் எவ்வளவு செய்தோம் தெரியுமா?” என்ற அளவில் கொழுத்தி போட்டாயிற்று
தந்திரமாக பத்திரிகைகளுக்கு இந்த செய்தியினை கசியவிட்டு சிரியாவில் தீ வைக்கின்றது இஸ்ரேல்
ஆம் , உக்ரைன் ஜார்ஜியாவில் யூதர் அதிகம் அவர்கள் ஆதிக்கமும் அதிகம்
சிரியா பக்கம் ரஷ்யா வந்தால் அப்பக்கம் இஸ்ரேலால் குழப்பம் ஏற்படுத்தமுடியும்
மிக தந்திரமாக ரஷ்யாவுக்கும் சிரியாவுக்கும் சிண்டு முடித்துவிட்டு அமைதியாக ரசிக்கின்றது இஸ்ரேல்
ரஷ்யா இதை அவசரமாக மறுக்கின்றது
எனினும் சிரியாவுக்கு ரஷ்ய மேல் சந்தேக கண் விழுந்தாயிற்று அதை துடைப்பது ரஷ்யாவுக்கு சவாலே
என்ன சொல்லுங்கள் இஸ்ரேலும் அதன் மொசாட்டும் வேற லெவல்
புட்டீனுக்கே பொட்டு வைத்து கையில் சுறா புட்டு கொடுப்பது என்றால் சும்மாவா?
