ஜெருசலேம் ஆலயம்

உலகின் மகா ஆச்சரியமும் சுவாரஸ்மும் கொண்ட ஆக பழமையான அடையாளமும் மிக நவீன விஞ்ஞானமும் கலந்து கிடக்கும் நகரம் ஜெருசலேம்

தாவீது அரசன் அதை கைபற்றியதில் இருந்து அது புது அடையாளம் பெருகின்றது, தாவீதே இன்றைய ஜெருசலேமிற்கு அஸ்திவாரமிட்டான்

சாலமோன் காலத்தில் அது உலகின் நம்பர் 1 நகரமாக மின்னியது, சொர்க்கத்துக்கு நிகரான அதை உருவாக்கி ஆண்டான் சாலமோன்

உலகம் அவன் காலத்தில் அந்நகருக்கு கப்பம் கட்டியது, காணிக்கை குவிந்தன ஏன் உலக மன்னர்களும் ராணிகளும் ஓடிவந்து அந்நகரை பார்த்து வியந்தனர்

அவனுக்கு பின் அந்த ஊருக்கு பிடித்தது சனி, ஆளாளுக்கு வந்து நொறுக்கினார்கள் பாபிலோன், கிரேக்கம் என பல கட்டுபாட்டில் இருந்த ஜெருசலேம் அப்பொழுது ஜூலியஸ் சீசரால் கைபற்றபட்டு ஆக்டேவியன் சீசர் கையில் இருந்தது

அப்பொழுதுதான் இரண்டாம் ஆலயம் கட்டினான் ஏரோது

இக்காலத்தில்தான் இயேசு வந்தார்

அந்த ஊரில்தான் தன் பெரும்பாடும் சாவும் நடக்கும் என உணர்ந்த இயேசு பலமுறை அந்த ஊரை பார்த்து பார்த்து அழுதிருக்கின்றார்

ஆம் இயேசு கண்ணீர் விட்டிருக்கின்றார்

அந்த நகரை அவருக்கு அவ்வளவு பிடித்திருக்கின்றது, அவரின் வாழ்வின் 12ம் வயதில் அந்த ஆலயத்திலே தங்கிவிட்டிருக்கின்றார், அந்த அளவு அவருக்கு அந்த ஊர் பிடித்திருந்தது

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் ஓடி ஓடி வந்து ரசித்திருக்கின்றார்

தான் அங்கு கொல்லபடுவோம் என்பதைவிட, அந்நகருக்கு அதன் பின் ஒரு நாளும் நிம்மதி இல்லை என்பதே அவருக்கு
மனம் கனக்க செய்திருக்கின்றது

அதை ஒரு இடத்தில் வலியாக சொல்கின்றார்

ஆம் சிலுவை சுமந்து வருகின்றார் இயேசு, ஜெருசலேம் யூத மங்கையர் எல்லாம் அவருக்காக அழும்பொழுது அந்த வலியிலும் ஆம் தலையில் முள்முடி உடலெல்லாம் இரவில் பட்ட சாட்டை அடி வலி தோளில் சிலுவை என்ற கொடும் நிலையிலும் அவர் இப்படி சொல்கின்றார்

“அம்மா எனக்காக அழவேண்டாம், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்”

இயேசு சொன்ன மாபெரும் தீர்க்க தரிசனமது, எந்நாளும் கண்முன் நிறைவேறும் தீர்க்கமான வார்த்தை அது

நிச்சயமாக இயேசுவின் சாவுக்கு பின் அவர் ரத்தம் அந்த ஊரில் சிந்தபட்டபின் நிம்மதி என்பது அங்கு துளியும் இல்லை

2000 வருடமாக இல்லை

இயேசு கொல்லபட்டபின் ரோமையருக்கும் யூதருக்கும் வெடித்த போரில் இரண்டாம் ஆலயம் நாசமாக்கபட்டு உலகெல்லாம் விரட்டபட்டனர் யூதர்

சென்ற இடமெல்லாம் கொத்து கொத்தாய் கொல்லவும் பட்டனர், ஹிட்லர் கொன்றது 80 வருடத்திற்கு முன்பு கொல்லபட்டதுதான் நமக்கு தெரியும்

ஆனால் 2000 வருடமாக 100 ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது வாங்கி அடிபட்டுசெத்து கொண்டே இருந்தார்கள்

அமெரிக்கா கண்டுபிடிக்கபட்டபின்பே அங்குகுடியேறிய பின்பே யூதருக்கு அமைதி, இன்னும் அவர்கள் அடிவாங்கா தேசம் அது ஒன்றுதான்

யூத இனம் இப்படி வாங்கியது என்றால் ஜெருசலேம் கடுமையாக வாங்கியது

யூத ரோம போர், யூத கிறிஸ்தவ போர் என அனுதினமும் சிந்தபட்ட ரத்தம், இஸ்லாம் வந்தபின் அதிகமாயிற்று

நிச்சயம் இஸ்லாமியர் யூதருடன் மோதவே இல்லை, சொல்ல போனால் இஸ்லாமிய கலீபா முதல் பல மன்னர் ஆட்சியில் அவர்கள் பாதுகாப்பாகவே இருந்தனர்

யுத்தம் கிறிஸ்தவ இஸ்லாமிய யுத்தமான சிலுவை போர்கள்

அப்பொழுது ஜெருசலேமில் மனித ரத்தம் குதிரையின் முழங்கால் அளவு பெருகியதாக வரலாறு ரத்த சாட்சி சொல்கின்றது

அதன் பின்னும் ஓய்ந்ததா? நெப்போலியன் ஆட்டோமன் துருக்கியர் காலம் என அங்கு ரத்தம் சிந்தபட்டுகொண்டே இருந்தது

இப்பொழுது பாலஸ்தீனியர் ரத்தமும் யூத ரத்தமும் சிந்தபட்டு கொண்டே இருக்கின்றது

யூதன் அறிவாளி விஞ்ஞானி பணக்காரன் சூழ்ச்சிக்காரன் என்பதெல்லாம் இருக்கட்டும் ஆனால் ஒரு நொடியினை கூட அவனால் நிம்மதியாக கழிக்க முடியாது

அவன் வாங்கிய சாபம் அப்படி, இப்பொழுதும் யூத ரத்தம் அந்த ஜெருசலேமில் சிந்தபட்டுகொண்டேதான் இருக்கின்றது

இன்று புனிதவெள்ளி

இயேசு சிலுவையில் 7 வார்த்தை சொன்னார் என இனி நாளை நள்ளிரவு வரை கிறிஸ்தவர் சொல்வர், இந்த அழிச்சாட்டிய கிறிஸ்தவர் என்னவெல்லாமோ சொல்வர்

ஆனால் மேற்காசியாவினை கவனித்தால் இயேசுவின் அந்த வார்த்தைதான், சிலுவையோடு அவர் நடந்தபொழுது சொன வார்த்தைதான் நினைவுக்கு வரும்

“அம்மா எனக்காக அழவேண்டாம், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்”

இதோ உலகமே அவர்களுக்காக அழுதது , 2000 வருடம் பட்ட அடிக்காக அழுதது, ஹிட்லர் கொல்லும் பொழுது அழுதது

இப்பொழுதும் ஏண்டா இப்படி.. என அவர்களுக்காக அழும்

ஏன்? எதற்காக‌

ஆம் இயேசுவே அந்த ஜெருசலேமினை பார்த்து கண்ணீர்விட்ட பின் நாம் என்ன சொல்ல முடியும்?

மாசில்லா நல்லவன் ரத்தம் சிந்தபடும் பூமி ஒருகாலமும் நிம்மதியாய் இராது என்பதற்கு ஜெருசலேம் பெரும் எடுத்துகாட்டு என சில ஆன்மீகவாதிகள் சொல்லலாம்

ஆனால் அங்கு ஏன் இவ்வளவு ரத்தமும் கண்ணீரும் என்பதற்கு எந்த காரணமும் இயேசு ஒருவரையன்றி யாருக்கும் தெரியாது

ஆனால் ஒன்று தெரியும்

அங்கு அமைதி வரவேண்டுமானால் , நிம்மதி நிலவ வேண்டுமானால் இயேசுவின் வார்த்தைகளை அந்த இனம் கேட்டு அன்பு வழிக்கு மாறவேண்டும்

இல்லாவிட்டால் அவர்கள் துயரமும் அழுகையும் நீங்க போவதில்லை

நம் சாவிலாவது அவர்கள் திருந்தட்டும் என மனம் உவந்து செத்தார் இயேசு

ஆனால் அந்த இனம் இன்னும் திருந்தவில்லை

இயேசு இப்பொழுதும் சொர்க்கத்தில் இருந்தும் அந்த நகரை நோக்கி அழுது கொண்டிருக்கலாம்