நடிகனுக்கு ஒரு நீதி, சாமானியருக்கு ஒரு நீதியா?

இந்த தேர்தல் கமிஷன் மேல் பலத்த சர்ச்சை வருகின்றது

ஏராளமான வாக்களர்கள் வாக்காளர் வரிசையில் பெயர் இல்லாமல் வாக்களிக்க முடியாமல் திரும்பியிருக்கின்றார்கள்

ஆனால் சிவகார்த்திகேயன் என்பவர் சிறப்பு வாக்கு அளித்தாராம்.

அவர் பெயர் பட்டியலில் இல்லை என்றாலும் சிறப்பு பிரிவில் அனுமதிக்கபட்டிருக்கின்றார்

அவர் என்ன தியாகியா? ராணுவ வீரரா? இல்லை வெளிநாட்டு தூதரா? ஆப்ரிக்க பக்கம் அமைதிபடை வீரராக சென்று திரும்பியவரா?

அவருக்கு ஏன் சலுகை?

கேட்டால் சட்டத்தில் வாய்ப்பு உண்டாம்

ஆனால் அதே சட்டம் சாமான்ய வாக்காளர் என்றால் கம்மென்று இருக்குமாம், சாமன்யருக்கும் அதை செய்தால் என்ன?

சாமான்யர்கள் பெயர் வாக்கு பட்டியலில் இல்லை என்றால் உடனே ஒன்றும் செய்யமுடியாது நீங்கள் வாக்களிக்க முடியாது என சொல்லும் அதிகாரிகள் இவருக்கு மட்டும் எப்படி சலுகை காட்டினார்கள்??

நடிகனுக்கு ஒரு நீதி, சாமானியருக்கு ஒரு நீதியா?

இந்த அநீதியினை கண்டிக்க வேண்டும், சிவகார்த்திகேயன் என்பவர் இந்நாட்டுக்கு அப்படி என்ன செய்துவிட்டார்?

தேர்தல் ஆணையம் பதில் சொல்லட்டும்