கொழும்பினை தகர்த்தது யார் என உலகிற்கே தெரியும்
கொழும்பினை தகர்த்தது யார் என உலகிற்கே தெரியும்
நிச்சயம் ஈழதமிழரோ அவர்களின் போராளிகளோ இந்த பாதகத்தை செய்யவே மாட்டார்கள். அவர்கள் வேறு வகை
இந்த தாக்குதல் வியூகம் எனும் கொடூரத்தை பாருங்கள் , இம்மாதிரி தொடர் குண்டுவெடிப்பெல்லாம் ஒரு சில கொடூர இயக்கங்களின் மூளையிலேதான் உதிக்கும்
அது மும்பை கோவை இன்னும் ஜமா இஸ்லாமியா எனும் அமைப்பின் பிலிப்பைன்ஸ் பாலி தாக்குதலில் தெரிந்தது
அதாவது ஒரு குண்டு வெடிக்கும் மக்கள் ஓடுவார்கள், அப்பொழுது அடுத்தடுத்து வெடித்து அப்பாவி மக்களை சாகடிக்க வேண்டும் எனும் ஒருவித கொடூர வன்மத்தில் நடத்தபடுவது
இதுவரை 8 இடங்களில் நடந்திருக்கின்றது கிட்டதட்ட பலி எண்ணிக்கை 80ஐ நெருங்குகின்றது
கிழக்காசியாவில் மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என உலக உளவு வல்லூறுகள் சொன்னது
இந்தியாவும் சொன்னது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடமாடும் பகுதி என்பதால் இந்தியா அங்கு உன்னிப்பாக கவனிக்கின்றது
இலங்கை உளவுதுறையும் இது பற்றி கடிதம் எல்லாம் எழுதியும் அரசு கவனிக்கவில்லை
சிங்கள புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களை , புத்த பூர்னிமா போன்ற நிகழ்வுகளை விட்டுவிட்டு ஈஸ்டர் பண்டிகையினை குறிவைத்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் இலக்கு சிங்களர் அல்ல
சதிகாரர்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும் எனினும் உரிய விசாரணை முடிவு வரை அமைதி காப்பதுதான் சரி என்பதால் நாம் அமைதி காக்கின்றோம்
1982ல் எரிய ஆரம்பித்த கொழும்பும் 90களின் மத்தியில் பெரும் குண்டுவெடிப்ப்பினை கண்டது, அது மத்திய வங்கி மீதான புலிகள் தாக்குதல்
அதன் பின் பெரும் தாக்குதல் மக்கள் மேல் இல்லை, இறுதி யுத்ததிலும் கொழும்பு அமைதியே
அந்த கொடும் காலத்திற்கு பின் இப்பொழுதுதான் எரிகின்றது, இப்பொழுது அவசர நிலையும் இன்னும் பல பதற்றமும் அங்கு தொற்றியிருக்கின்றது
விரைவில் அவர்கள் எல்லா வலிகளையும் கடந்து வரட்டும், இத்தேசம் அவர்களுக்கு எல்லா வகையிலும் துணை நிற்கின்றது