கடவுளின் மகனால் அன்றி வேறுயாரால் சாத்தியம்
ஒரு யூதனிடம் பேசும் பொழுது இப்படித்தான் சொன்னான்
நண்பரே இயேசு உயிர்த்திருக்கலாம் ஆனால் உயிர்த்தவர் என்ன செய்திருக்க வேண்டும், ஏரோது முன்னாலும் பிலாத்து முன்னாலும் வந்து சிரித்திருக்க வேண்டும்
இயேசு இறந்துவிட்டார் என சான்றிதழ் கொடுத்தது லூக்காஸ் என்கின்றார்கள், ஆம் இரண்டாம் நற்செய்தி எழுதிய அந்த லூக்கஸ்
ஆனால் இயேசு ஏன் வரவில்லை, அவர் உயிர்த்தது உண்மை என்றால் மறுபடியும் போதிக்க வந்திருக்கலாம் கைப்பஸும் அன்னாசும் அலறி இருப்பார்கள்
ஆனால் அவர் அப்படி செய்யவில்லையே ஏன்?
அதனால்தான் சொல்கின்றோம் , கிறிஸ்தவம் என்பது அவர் உடலை திருடி அவரின் அப்போஸ்தலர் செய்த ஏமாற்று வேலையே அன்றி வேறல்ல, ஆனால் அவர் ஒரு இறைவாக்கினர் என்பதில் சந்தேகமில்லை”
இஸ்லாமியனிடம் கேட்டால் இயேசு என்பவர் ஈசா நபி ஆனால் அவர் சிலுவையில் அறையபடாமல் மலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டார் அறையபட்டது இன்னொருவர்
இயேசு விண்ணகம் ஏறி சென்றார் கடைசி நாளில் வருவார்
ஆக யூதரும் இஸ்லாமியரும் இயேசு பற்றி சொல்வது இதுதான்
ஆனால் கிறிஸ்தவர் சொல்வது இதுதான்
கிறிஸ்து உயிர்த்தபின் தன்னை நம்பியவர்களுக்கு மட்டும் தோன்றினார், இன்னும் தன்னை நம்பியவர்களுக்க்கு அவர் கண்முன் நிற்கின்றார்
ஆம் அதுவும் சரிதான், ஒரு சாதாரண மனிதனின் சாவென்றால் அது இவ்வளவு பெரும் வீச்சினை உலகில் ஏற்படுத்தியிருக்க முடியாது
இந்த உலகில் மாபெரும் மாற்றத்தை இயேசுவின் மரணமும் அவர் உயிர்த்தார் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தியது
அவர் மெசியவா இல்லை இன்னொருமுறை வருவாரா என்பது விஷயம் அல்ல
அவரிடம் ஏதோ இருக்கின்றது, பெரும் அருள் அவரோடு இருந்திருக்கின்றது
இல்லை என்றால் 2000 ஆண்டு கடந்தும் ஒருவன் உலகினை பாதித்து கொண்டே இருக்க முடியுமா?
அந்த இயேசு சிலுவையில் இருக்கும் பொழுது அந்த நூற்றுவர் தலைவன் சொன்னதுதான் சரி
ஆம் அவர் உண்மையிலே கடவுளின் மகனாய் இருந்தார்
எந்த ரோமை அரசு இயேசுவினை கொன்றதோ அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை கத்தியின்றி ரத்தமின்றி கிறிஸ்தவம் கைபற்றி 2000 ஆண்டுகளாக அசைக்க முடியாத வகையில் அமர்ந்திருப்பது கடவுளின் மகனால் அன்றி வேறுயாரால் சாத்தியம்