இதுவரை வந்த தகவல்
இலங்கை பெரும் குண்டுவெடிப்பு விசாரணை பல கோணங்களில் நடத்தபட்டு கொண்டிருக்கின்றது இதுவரை வந்த தகவல் இவைதான்
முதலாவது எந்த இயக்கமும் இதற்கு பொறுப்பேற்கவில்லை, அல் கைதா எதை செய்தாலும் தில்லாக நிற்கும் தன்மையுடையது , பின்லேடனுக்கு பின்னாலும் ஐ.எஸ் இயக்கத்தின் அழிச்சாட்டியத்தாலும் அது இப்பொழுத அமைதி
அய்மன் அல் ஜவஹரி தலமையினான அல்கய்தா இப்பொழுதெல்லாம் எங்கும் தாக்குவதில்லை, இன்னொன்று அல் கய்தா எப்பொழுதும் அமெரிக்க இலக்குகளை அல்லது அது சம்பந்தபட்ட நாடுகளின் சொத்துக்களைத்தான் குறிவைக்கும் என்பதால் இச்சம்பத்தில் அல் கய்தா இல்லை
ஐ,எஸ் காட்டுமிராண்டி இயக்கம் சந்தேகமில்லை ஆனால் டெங்கு காய்ச்சலில் செத்தவனையும் நாமே கொன்றோம் என சொல்லி தாடி தடவும் கூட்டம் அது, ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது, இப்பொழுது அவர்களும் அமைதி
மற்றபடி தாலிபன் போன்றவை ஒரு நாளும் கோட்டை தாண்டாது
கிழக்காசிய இயக்கமான ஜமா இஸ்லாமியாவும் இப்பொழுது களத்தில் இல்லை
ஆக இலங்கையில் நடந்தது தீவிரவாத தாக்குதல் இல்லை என சொல்லமுடிகின்றது என்கின்றார்கள்
அது பின்பு எப்படியான தாக்குதல் என்றால் இந்தியாவின் மும்பை மற்றும் கோவையில் நடந்தது அல்லவா? அப்படியான தாக்குதல்
அது என்ன வகை?
எங்கோ இருந்து கொண்டு இந்தியாவில் என்ன செய்யலாம் என திரியும் கோஷ்டி இங்கிருக்கும் சில அரைமூளைக்காரனை சலவை செய்து அல்லது தாவுத் இப்ராஹிம் போன்ற தாதாக்களை வைத்து செய்துவிடுவது
இதனால் யாருக்கு என்ன லாபம் என்றால் முதல் லாபம் தாதாக்களுக்கு இரண்டாம் லாபம் அந்த தாக்குதலால் யாரின் சொத்து அழியுமோ அவர்கள் எதிரிக்கு
இலங்கை ஒரு கனவு கன்னி என்பது உலகறிந்தது அதன் அமைப்பும் இன்னும் பல வளங்களும் அப்படியானது
அதை யார் கையில் வைத்திருப்பது என்பதன் போட்டி அதிகம்
இப்பொழுது இலங்கை சீனபிடியில் இருந்து வெளிவர எத்தணிக்கின்றது, இந்தியாவும் இலங்கையும் அதன் பிடியினை இறுக்குகின்றன
சில காரணங்களுக்காக பாகிஸ்தானுடன் முன்பு பச்சைகொடி காட்டிய இலங்கை இப்பொழுது அவர்களுக்கு சிகப்பு கொடி காட்டிற்று
இதை எல்லாம் கூட்டி கழித்த நிபுணர் மற்றும் உளவு நிபுணர்கள் இந்த முடிவுக்கு வருகின்றனர்
இது இலங்கையில் சில சக்திகள் காலூன்றி விடாமல் இருக்க அதாவது இலங்கை பாதுகாப்பே இல்லா நாடு என அறிவிக்கபட களத்தில் இறங்கிவிட்டார்கள்
அதற்கு உள்ளூர் ரவுடிகளையும் விரோதிகளையும் பயன்படுத்தியாயிற்று
தற்கொலை குண்டுவெடிப்பாளி இஸ்லாம் என சிலர் சொன்னாலும் அவன் தாடி உள்ளிட்ட இஸ்லாமிய அடையாளம் மாற்றபட்டு காரியம் செய்திருக்கலாம் என்ற கோணமும் உண்டு
பெரும் தலைகள் இதில் சம்பந்தபட்டிருக்கலாம்
இப்பொழுதும் பாருங்கள் இந்தியாவும் அமெரிக்காவும் அலறிகொண்டு உதவ செல்கின்றன
ஆனால் பாகிஸ்தானும் சைனாவும் ரஷ்யாவும் அமைதி
ஆச்சரியமாக இஸ்ரேலும் அமைதி, ஏன் அமைதி?
இஸ்லாமியர் அல்லாத எந்த சர்ச்சைக்கும் இஸ்ரேல் வராது அதன் தன்மையும் சிந்தனையும் அப்படி
ஆக இலங்கையில் நடந்தது மத ரீதியான தீவிரவாத தாக்குதல் அல்ல, யாருக்கோ எதற்கோ எச்சரிக்கையும் பதிலும் கொடுக்க சில அந்நிய சக்திகள் உள்ளூர் ரவுடிகளை வைத்து செய்துவிட்ட காரியம்
இந்த இடத்தில் நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம், நம்மை பலகாலம் பின்பற்றி வந்திருந்தால் கேட்கலாம்
முன்பு இந்திய பின்னணியில் ஈழபோராளிகள் இப்படித்தானே குண்டு வெடிக்க வைத்தார்கள், அப்படி இப்பொழுதும் ஒரு குழு எந்த நாட்டின் உளவுதுறையிடமாவது சிக்கி இருக்கலாம் அல்லவா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்
ஒரு நாடு இன்னொரு நாட்டில் கால் பதிக்க தந்திரமாக போராளி இயக்கம் பின்னால் இருந்து செயல்படுவதற்கும், சில குழப்பங்களை மட்டும் ஏற்படுத்த சில சமூக விரோத சக்திகளை தற்காலிகமாக பயன்படுத்தவும் வித்தியாசம் உண்டு
உதாரணம் காஷ்மீரில் பாகிஸ்தான் செய்வதும் அதே பாகிஸ்தான் மும்பை உட்பட சில இடங்களில் செய்ததும் மேற்கண்ட வகை
இப்போதைக்கு இலங்கையில் கடும் கட்டுபாடும் ஒரு வித பயம் கலந்த அமைதியும் நீடிக்கின்றது
அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் கொழும்பு மட்டும் என்பதால் வெளிநாட்டு பயணிகள் உடனே வெளியேறமுடியாமல் ஹோட்டல்களில் அடைந்து கிடக்கின்றனர், சம்பந்தபட்ட வெளியுறவுதுறைகள் அவர்களுக்கு ஆறுதல் சொல்கின்றன
இன்னொரு பக்கம் கொல்லபட்ட வெளிநாட்டவர் எண்ணிக்கையினை அந்தந்த தூதரகங்கள் உறுதிபடுத்துகின்றது
உலகிற்கே தேயிலையும் லவங்க பட்டையும் இன்னும் ஏராளான கடல் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடு இலங்கை
இப்பொழுது சவபெட்டிகளை கண்ணீரோடு அனுப்பிகொண்டிருக்கின்றது