அது எந்த நாடு?

கொழும்பு குண்டுவெடிப்பு விசாரணை தகவல்கள் வர தொடங்கிவிட்டன,

30 பேரை கைது செய்திருக்கும் அந்நாடு கடும் விசாரணையில் இருக்கின்றது, கைது செய்யபட்டோர் விவரம் இன்னும் வெளியிடபடவில்லை

கைது செய்யபட்டவர்கள் பற்றி முழு விவரம் தெரியாவிட்டாலும் இலங்கை அரசு சில விஷயங்களை கோடிட்டு காட்டுகின்றது

அதாவது நாட்டில் அடிப்படைவாத இயக்கம் மேல் தடை உத்தரவு அமல்படுத்தபடும் என்கின்றது இலங்கை அரசு

இஸ்லாம் பவுத்தம் என பல அடிப்படை வாத கும்பல் அங்கு உண்டு என்பது வேறு விஷயம் இதனால் ஒரு விஷயத்தைச் சீரியசாக கசிய விடுகின்றார்கள்

மிக முக்கியமாக கசியும் விஷயம் சந்தடி சாக்கில் வாகனம் நிறைய குண்டு ஏற்றி இந்திய தூதரகத்தை தகர்க்க நடந்த சதி தெய்வாதீனமாக நடக்கவில்லை

அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நபர் கடைசி நேரத்தில் சொதப்பி இருக்கலாம் என்கின்றார்கள்

இந்திய தூதரகம் எப்படியோ தப்பிவிட்டது

ஆக அடிப்படைவாத இயக்கம், இந்திய தூதரக குறி என எல்லாவற்றையும் கூட்டி கழித்து பாருங்கள், இந்த திட்டம் இந்தியாவுக்கு எதிரான நாடு ஒன்றின் திட்டமாக முடியும்

அது எந்த நாடு?

இலங்கை அரசு பொறுமை காப்பதால் நாமும் பொறுமை காக்கத்தான் வேண்டும்