அங்கிள் சைமன் அங்கு ராதிகா உயிர்தப்பியது போல் தப்பினால் எப்படி இருந்திருக்கும்?

இலங்கையில் நடந்தது பெரும் துயரம்தான்

ஆனால் அங்கிள் சைமன் அங்கு ராதிகா உயிர்தப்பியது போல் தப்பினால் எப்படி இருந்திருக்கும்?

வியப்பும் திகைப்பும் மிகுந்த கதை நமக்கு கிடைத்திருக்கும்

“அடிக்கடி இலங்கை போய் நிலமைய பார்த்துட்டு வருவேன் காரணம் எப்படி எங்க அடிக்கணும்னு கள நிலவர வேணுமில்ல, அப்பத்தான ராஜபக்சேவ தூக்க முடியும் கொழும்ப கைபற்றி இன விடுதலை அடைய முடியும்

அங்கதான் அண்ணன் பிரபாகரன் மாறுவேடத்துல இறால் வித்துட்டு இருக்காரு இது ஒரு பயலுக்கும் தெரியாது, நான் இறால் வாங்கிறது மாதிரி தகவல் சொல்லிட்டு வருவேன் அவன் ஆமை ஓட்டுக்குள்ள தகவல் வச்சி தருவார், 2 நிமிஷத்துல முடிச்சிருவோம்

அன்னைக்கு நான் விடுதில இருந்தேன் , ஒருத்தன் ஒரு மாதிரி முழிச்சிட்டே உள்ளே வந்தான்

ஆமை கறி தின்னாலும் அக்கம் பக்கம் பார்க்கணும்னு அண்ணன் சொன்னத நா மறக்கல, அவர் பார்வையிலே கண்டுபிடிச்ச்சிட்டேன்

அவன் விசைய அழுத்தும் முன்னால அங்க சாப்பாடு மூடி வச்ச பெரிய தட்ட எடுத்துட்டு ஜன்னல் பக்கம் இருந்த திரைசீலைய கிழிச்சிட்டு ரெடியாயிட்டேன்

அவன் டிரிக்கர அமுத்தவும் வெடிச்சிட்டு, நான் அந்த மூடியல என்ன மூடிகிட்டேன்,

சக்திவாய்ந்த வெடிப்பு என்ன ஒரு 5 கிமீ தூரத்துக்கு வானத்துல தூக்கி அடிச்சி, நான் அந்த மூடி மேல உட்கார்ந்துட்டு ராக்கெட்ல போனமாதிரி போனேன் ஹஹஹஹஹஹா

ஒரு கட்டத்துல தட்டு கீழ இறங்க ஆரம்பிச்சிட்டு உடனே அந்த ஜன்னல் திரைச்சீலைய பாராசூட் மாதிரி கட்டிட்டு சர்ர்னுனு இறங்கிட்டேன் ஹாஹா

இறங்கி பார்க்குற்றேன் ஒரே சாவு ரத்தம் கூட்டம், அழுகை இதெல்லாம் அண்ணன் கூட நிறைய பார்த்ததுனால பழகி போச்சி

நடந்துட்டே இருந்தேன் ஒரு சிங்களன் என்ன உத்து பார்த்தான் ஆனா அடையாளம் காண முடியல, ஏன்னா பாராசூட்ல குதிக்கும் போதே சும்மாதான இருக்கோம்னு மீசை எல்லாம் எடுத்துட்டு கூலிங் கிளாஸ் போட்டுட்டேன்

அவன் குறுகுறுன்னு பார்த்தும் அடையாளம் காண முடியல,, அப்புறம் அப்படியே விமான நிலையம் வந்து இங்க வந்துட்டேன்

இதுக்கெல்லாம் ஒரே காரணம் என் அண்ணன் கொடுத்த பயிற்சிதான், இனி அணுகுண்டு வெடிக்கும் பொழுது எப்படி தப்பிக்கணும்னு தம்பிகளுக்கு இத பயிற்சியா கொடுக்கலாம்னு இருக்கேன்”