விஷயம் வில்லங்கமானது

பல விவகாரங்கள் இலங்கையில் இருந்து கிளம்புகின்றன‌

கடந்த ஜனவரி மாதமே 100 கிலோ வெடிபொருள் புத்தளம் பகுதியில் கைபற்றபட்டது

புலிகள் இல்லாத நிலையில் அதை பதுக்கியது யாரென விசாரித்ததில் பாகிஸ்தானை சேர்ந்த சிலர் மேல் சந்தேகம் வந்து விசாரித்தனர்

விஷயம் வில்லங்கமானது

எனினும் இந்தியாவுக்கு எதிராகத்தான் ஏதோ திட்டமிடுகின்றார்கள் என சந்தேகித்த இலங்கை விஷயத்தை பெரிதுபடுத்தவில்லை

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் இலங்கையில் வலுவாக உள்ளது என்ற இந்தியாவின் அறிவிப்பினை இலங்கை பெரிதாக கண்டுகொள்ளவில்லை ஒரு மாதிரி ரசித்தது

ஆனால் இந்தியாவின் பதில் நடவடிக்கையில் தாக்குபிடிக்க முடியாத இலங்கை இந்தியா இலங்கை அதிபரை கொல்ல பார்க்கின்றது என்றேல்லாம் ஆட்டத்தை மாற்றி ஆடியது

அதாவது ஏதோ முன்பே நடந்தது, ராஜபக்சே கூட பிரதமராக முயன்றார் நினைவிருக்கின்றதா?

ஆக கூட்டி கழித்து வகுத்து பெருக்கி பாருங்கள்

ஏதோ அங்கு பாகிஸ்தான் செய்ய நினைத்திருக்கின்றது, இலங்கை அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் இந்தியாவுக்கு எதிராக சிந்தித்திருக்கின்றது

இதில் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் ரகசிய மோதல் நடந்திருக்கின்றது

கடைசியில் வரம் கொடுத்தவன் தலையிலே கையினை வைத்துவிட்டான் பஸ்மாசுரன்

ஆக இலங்கை அரசு தடுத்திருக்க வேண்டிய சதிசெயலை சில காரணங்களுக்காக விட்டுவைத்து அது அவர்களுக்கே எமனாக விடிந்துவிட்டது

பல நாடுகளின் அமைதியும் விஷயத்தை உறுதிபடுத்துகின்றன

சதிகாரர்கள் ஒரு கோணத்தில் சிந்திக்க, இலங்கை அரசு இன்னொரு கோணாத்தில் சிந்திக்க கடைசியில் இலங்கை மேலேயே அவர்கள் பாய கடைசியில் செத்தது 300 பேர் காயமடைந்து போராடுவது 500 பேர்