இந்தியருக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கு ஒன்று சொல்லிகொள்கின்றோம்
இந்தியருக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கு ஒன்று சொல்லிகொள்கின்றோம்
இது சில கொடூர தீவிரவாதிகளின் தாக்குதல், அதுவும் தூத்துகுடியில் இருந்து வெறும் 250 கிமீ தூரத்தில் நடந்திருக்கும் தாக்குதல்
ஆம் அவ்வளவுதான் தூரம்
இதில் அந்த கொடிய தீவிரவாதி இஸ்லாமாக இருக்கலாம் மாறாக எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் அல்ல
இதில் ஒரு பெரும் குழப்பம் வருகின்றது அது தவுபிக் ஜமாத் பெயர் குழப்பம்
ஆம் தமிழகத்தில் ஒரு தவுபிக் ஜமாத் என்றொரு அமைப்பு உண்டு, பிஜே என்பவர்தான் அந்த அமைப்பின் தலைவர்
2004ல் தொடங்கிய அந்த அமைப்பின் தலைவர் பிஜே, அவர் இஸ்லாமில் பிரசித்தியோ இல்லியோ அவரின் ஆடியோ மிக பிரசித்தி
இந்த தமிழக தவுபிக் ஜமாத்தின் பிரிவு இலங்கையிலும் உண்டு
அது சிறீலங்கா தவுபிக் ஜமாத், அதுவும் நல்ல அமைப்பு அல்ல என்பதுதான் விஷயம், 2016ல் மற்ற மதங்களை இழிவாக பேசி புத்தர் சிலையினை உடைத்து பெரும் சர்ச்சை எல்லாம் செய்தார்கள்
ஆனால் இந்த தமிழக தவுபிக் ஜமாத்தின் இலங்கை அல்ட்ராசிட்டி கிளையான சிறீலங்கா தவுபிக் ஜமாத் என்பது இந்த கொடும் குண்டுவெடிப்பில் இல்லை
சத்தியமாக இல்லை
அந்த படுபாதகத்தை செய்திருப்பது “தேசிய தவுபிக் ஜமாத்” எனும் இன்னொரு இலங்கை அமைப்பு
அவர்களுக்கும் இவர்களுக்கும் துளியும் தொடர்பில்லை
விஷயம் போகிற போக்கில் இலங்கையில் கொடூரத்தை அரங்கேற்றியது தமிழக தவுபிக் ஜமாத்தின் இலங்கை பிரிவானசிறீலங்கா தவுபிக் ஜமாத் என நிச்சயம் எவனாவது கொளுத்தி போடுவான்
அந்த பொறுப்பற்ற தரப்பினரின் கதறலை புறந்தள்ளிவிட்டு தமிழக தவுபிக் ஜமாத்தின் பிரிவான சிறீலங்கா தவுபிக் ஜமாத்திற்கும் இந்த கொடிய பிரிவான தேசிய தவுபிக் ஜமாத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டு தமிழகம் நடக்கட்டும்
அதுதான் நல்லது
எவனோ ஒன்றிரண்டு மதிகெட்டவன் செய்யும் காரியங்களுகு எல்லா இஸ்லாமியரையும் சந்தேக கண்ணோடு பார்த்தல் கூடாது
இங்கு நாட்டுபற்றும் தெளிவான சிந்தனையும் கொண்ட இஸ்லாமியர் 99% உண்டு
ஒரு சில விதிவிலக்கான மிருகங்கள் இருக்கலாம் அவர்களை புறந்தள்ளுவோம்
எப்போதையும் விட இப்பொழுதுதான் நம் சகோதர இஸ்லாமியருக்கு நம் அன்பும் கூடுதல் அரவணைப்பும் தேவை..