தமிழக பெண் சாதித்திருக்கின்றார்
தோகாவில் நடக்கும் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக பெண் சாதித்திருக்கின்றார்
பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி முதலிடத்தை பிடித்து இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார்.
இதே தோகாவில் தமிழக வீராங்கனை சாந்தி தங்கபதக்கம் பெற்றதும் அவருக்கு கலைஞர் பிளாஸ்மா டிவி எல்லாம் கொடுத்ததும் நினைவுக்கு வருகின்றது
பின்பு பெரும் சர்ச்சையில் அவரிடம் இருந்து பதக்கம் பறிக்கபட்டது, தமிழக அரசும் அவருக்கான நீதியினை பெற்று கொடுக்கவில்லை
இந்த காட்சிகள் எதிர் நீச்சல் படத்தில் கூட வந்தன
அப்படி தமிழக வீராங்கனை வஞ்சிக்கபட்ட இடத்தில் இன்னொரு தமிழச்சி வென்றிருக்கின்றார்
சாந்திக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கு கண்ணீர் வடித்தபடியே இந்த தமிழச்சியினை தேசம் வணங்குகின்றது