ஏன் தேவையின்றி பரபரப்புக்காக எழுதுகின்றாய்?
கிறிஸ்தவ ஆலய குறிவைப்பும் தகர்ப்பும் சரி, இந்த இந்திய தூதரகம் மேல் பொட்டுவெடி கூட இல்லையே, பின் ஏன் தேவையின்றி பரபரப்புக்காக எழுதுகின்றாய் என கேட்ட்கின்றனர் சிலர்
அவர்கள் எல்லாம் ஆண்டி இன்டியன்ஸ்
இந்த இலங்கை குண்டுவெடிப்பு விசாரணை எப்படி தொடங்கியது என்றால் இப்படித்தான், அதாவது உலகில் எல்லாவற்றிற்கும் அதிர்ஷ்டமும் வேண்டும்
அப்படி தீவிரவாத தாக்குதலுக்கும் அதிர்ஷ்டம் வேண்டும்
என்ன துரதிருஷ்டம் என்றால் சின்னமன் ஹோட்டல், சங்ரிலா ஹோட்டல் போல தாஜ் சமுத்திரா ஹோட்டலிலும் மனித வெடிகுண்டு இருந்திருக்கின்றது
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களின் குண்டு வெடிக்கவில்லை அத்தோடு அகப்பட்டுகொண்டார்கள், சயனைடு எல்லாம் அவர்களிடம் இல்லை அதனால் சாகமுடியவில்லை
இங்கிருந்துதான் விசாரணை தொடங்கி இவ்வளவு முடிச்சும் அவிழ்க்கபட்டுள்ளன
அவர்கள் கொடுத்த தகவலில்தான் வெள்ளவத்தை பக்கம் இருந்த வெடிகுண்டு வேன் கைபற்றபட்டது
அங்கும் அதிர்ஷ்டம் இருந்திருக்கின்றது, வெடிகுண்டு நிரப்பபட்ட வேனை கொண்டுதான் இந்திய தூதரகத்தை தகர்க்க திட்டமிட்டிருக்கின்றார்கள்
ஏதோ ஒரு தடங்கல் காரணமாக அவர்கள் அதை செயல்படுத்தவில்லை
அல்லது முன்கூட்டியே குண்டுகள் வெடித்துவிட்டதால் பலத்த பாதுகாப்பில் வாகனத்தை செலுத்தமுடியாமல் கைவிட்டுவிட்டார்கள்
அதை பின்பு பாதுகாப்பு படைகள் செயலிழக்க வைத்தன
இருந்தாலும் இன்னும் 3 வெடிமருந்து நிரம்பிய வாகனங்கள் கொழும்பில் நுழைய தயாராக இருப்பதாக அமெரிக்கா கொடுத்த தகவலையடுத்து கடும் பாதுகாப்பு பலபடுத்தபட்டிருக்கின்றது
ஆக பாதுகாப்பு நிரம்பிய இந்திய தூதரகத்தில் தற்கொலையாளி உள்ளே புகுந்து தாக்க முடியாது, அதுவும் விடுமுறை நாளில் முடியாது என்பதால் வாகன சகிதம் திட்டமிட்டிருகின்றார்கள்
ஆனால் அதிர்ஷ்டம் காரணமாக அது நடக்கவில்லை
இந்தியாவுக்கு பல இடங்களில் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் , அபிநந்தன் மிக் 21ஐ வைத்து கொண்டு எப் 16ஐ அடித்து மீண்டதெல்லாம் அந்த வகையே
அது இலங்கையிலும் நடந்திருக்கின்றது