கோமதியின் சாதனை பெரிது

நிச்சயம் பி.டி உஷாவின் சாதனையினை விட கோமதியின் சாதனை பெரிது

பி.டி உஷா பெற முடியாத இடத்தினை கோமதி அடைந்துவிட்டார், உரிய பயிற்சிகள் கிடைக்கும் பட்சத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் அவரால் ஆச்சரியங்களை நிகழ்த்த முடியும்

ஆனாலும் இந்திய ஊடக நிலை மற்றும் அரசியல் நிலையினை கவனியுங்கள்

தோற்றுபோன பிடி உஷாவுக்கும் அஞ்சு ஜார்ஜுக்கும் கிடைத்த வரவேற்பு வெற்றிபெற்ற கோமதிக்கு இல்லை

ஏன் என்றால் இப்படித்தான்

இங்கு தமிழருக்கு டெல்லியில் லாபி செய்ய நல்ல தலமையும் இல்லை அவர்களுக்காக வாதிட யாரும் இல்லை.

இதே டோகாவில் வென்ற சாந்தி எனும் தமிழக வீராங்கனையினை இம்மாநிலம் அப்படித்தான் கைகழுவியது

ஆம் அவருக்காக பேச இங்கு யாருமே இல்லை, நீட்டுக்காக செத்துவிட்ட அனிதா போலவே அவரும் ஒரு கண்ணீர் அடையாளம்

அதைபற்றி கவலைபட இங்கு யாருமில்லை, அப்பொழுது மோடி இருந்திருந்தால் கூட தமிழர் உரிமை காக்க கிளம்பியிருப்பார்கள்

ஆனால் சாந்தியின் கெட்ட நேரம் மன்மோகன்சிங்கும் அதில் கலைஞரும் இருந்தார்கள், பின் எப்படி சாந்திக்கு நீதி கிடைக்கும்?

காவேரி முல்லை பெரியாறு போன்ற தேசிய விவகாரங்களில் தேசிய கட்சி ஆதிக்கம் செலுத்தும் அம்மாநிலங்கள் பெரும் பிடியினை கொண்டிருப்பது போல விளையாட்டு துறையிலும் கொண்டிருக்கின்றன‌

தமிழனை காக்க கிளம்பிய யாரும் இங்கு தமிழன் உரிமையினை விளையாட்டு போட்டியில் கூட காக்கவில்லை

இப்பொழுதும் கேளுங்கள், டெல்லி தமிழனை வஞ்சிக்கின்றது என்றுதான் அரசியல் பேசுவார்களே தவிர, இங்கு இவர்கள் கன்னடம் கேரளம் போல் தேசியம் பேசினார்களா என சிந்திக்கவே மாட்டார்கள்

எனினும் தேசத்து தங்க மகளை தமிழ்மகள் என ஒதுக்காமல் உரிய பயிற்சிகளையும் உற்சாகத்தையும் இத்தேசம் கொடுத்தல் வேண்டும்

அந்த அரவணைப்பிலும் தேசம் கொடுக்கும் நம்பிக்கையிலும் டோக்கியோவில் கோமதி ஆச்சரியங்களை நிச்சயம் கொடுப்பார்