இலங்கையில் காட்சிகள் வேகமாக மாறுகின்றன‌

இலங்கையில் காட்சிகள் வேகமாக மாறுகின்றன‌

“தேங்யூ ஐ.எஸ் தேங்யூ” என சொல்லிகொண்டே காட்சிக்குள் ஓடிவருகின்றது அமெரிக்கா, டிரம்ப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு போன் செய்து “2001க்கு பின் அமெரிக்கா காணும் பெரும் அழிவு இது, இனி நாம் இணைந்த கைகள்” என சொல்லிவிட்டார்

சொல்லிவிட்டு சும்மா சென்றாலும் பரவாயில்லை எப்.பி.ஐ எனப்படும் தன்நாட்டு பாதுகாப்பு அமைப்பையும் விசாரணைக்கு அனுப்பிவிட்டார்

இதுதான் ஆச்சரியம், ஏன் இந்த வல்லமைமிக்க எப்.பி.ஐயினை அனுப்பவேண்டும் என்றால் விஷயம் வேறொன்றுமல்ல இனி வலுவாக இலங்கையில் கால்பதிக்க அஸ்திவாரம் தோண்டுவதற்கு

கவனியுங்கள் டிரம்ப் ஏன் ஜனாதிபதி மைத்ரிபாலாவினை விட்டுவிட்டு ஐரோப்பிய சார்பு ரனிலுக்கு போன் செய்தார்?

இது சீனசார்பு மைத்ரிபாலாவுக்கு பெரும் எச்சரிக்கை, இனி அடுத்த அதிபராக ரனிலை ஆக்குவோம் உங்கள் நாட்டில் வலுவாக வந்துவிட்டோம் எனும் எச்சரிக்கை

ஆடிபோன மைத்ரிபாலா பல்லைகடித்து கொண்டு அமெரிக்காவுக்கு தலையாட்டினார், அமெரிக்கா சீனாவுக்கு கடுக்காய் கொடுத்துவிட்டது அதுவும் இலங்கையில்

எப்படி?

சீனா தன் கடற்படையின் 70ம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகின்றது உலகெல்லாம் எல்லா நாட்டு கடற்படையினை அழைத்தும் அமெரிக்கா செல்லவில்லை

ஆனால் இலங்கையில் ஹம்பாந்தோட்டை எனுமிடத்தில் 99 வருட குத்தகைக்கு சீனா ஒரு துறைமுகத்தை வைத்துள்ளது, குத்தகை சீனாவுக்கு எனினும் இலங்கை கப்பல் நடமாடதடையில்லை

இதில் குறிவைத்த அமெரிக்கா இலங்கை கடற்படையினை கூட்டு பயிற்சிக்கு அழைத்து தன் பிரமாண்ட கப்பல்களை அங்கு அனுப்பியாயிற்று

இதை சீனாவாலும் தடுக்க முடியாது, இலங்கைக்கும் வேறு வழியில்லை

இலங்கை அமெரிக்க கடற்படை கூட்டு பயிற்சி என்பது திமுக நாம் தமிழரை கூட்டணிக்கு அழைத்தது போன்ற காமெடி விஷயம்

ஆம் இலங்கை வந்த அமெரிக்க கப்பல்களை கண்ட இலங்கை ராணுவம் “அம்மாடி.. இதுதான் போர்கப்பலா? அப்படியானால் நம் கப்பல்?..” என மாறி மாறி பார்க்கின்றன‌

அவர்கள் பார்க்கட்டும் விஷயம் இதுதான்

தேசிய தவுபிக் ஜமாத் திறந்துவிட்ட வாசலில் மிக உற்சாகமாக இலங்கைக்கு அமெரிக்கா தன் இடது காலை எடுத்து வைத்து வந்தாயிற்று

இது ஐ.எஸ் தாக்குதலா என கேட்டதற்கு பதிலளித்த அமெரிக்க சர்வசக்தி படைத்த மைக் பாம்பியோ மிக நுண்ணிய அரசியல் பதில் அளித்திருக்கின்றார்

“இந்த தாக்குதலில் சம்பந்தபட்ட நபர்கள் ஒரு தெற்காசியா நாட்டுக்கு அடிக்கடி சென்ற ஆதாரம் எம்மிடம் உண்டு, அந்நாடு தன் எல்லை தாண்டியும் தீவிரவாதத்தை பரப்பும் நாடு”

அதாவது பாகிஸ்தானை மிக பாயின்டாக குறிவைத்து சொல்கின்றார் பாம்பியோ

(இன்னும் அவர்கள் கசியவிடும் செய்திகளில் பாகிஸ்தானில் இந்தியா தகர்த்த 6 பயிற்சிகூடங்களில் இவர்கள் முன்னமே பயிற்சி பெற்று திரும்பியிருக்கலாம் எனும் தியரியும் ஓடுகின்றது

வாய்ப்பு இல்லாமல் இல்லை)

இந்த தற்கொலைபடை இம்சைகளும் பயிற்சி கொடுத்தவர்களும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்ற கோணத்தில் அமெரிக்க கணக்கு செல்கின்றது

ஆக பொறுப்பேற்றது ஐ.எஸ் என்றாலும் அதை சந்தேகிக்கும் வகையில் அமெரிக்காவின் பதில் உள்ளது

இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாத நடமாட்டம் உள்ளது என்ற இந்தியாவின் குரலுக்கு வலு சேர்த்துவிட்டது அமெரிக்கா

எப்படியோ அமெரிக்கா இலங்கையில் கால்வைத்தாயிற்று இனி பல அதிரடி காட்சிகள் இடம்பெறலாம், இது இலங்கைகு நல்லதோ இல்லையோ இந்தியாவுக்கு நல்லதல்ல‌

காலடியில் பலமிக்க எதிரி நிற்பது பாதுகாப்பு அல்ல‌

நாம் கொஞ்சம் வரலாற்றில் மூழ்கிவிட்டு வரலாம்

1983ல் இப்படித்தான் கொழும்பு எரிந்தது, இங்காவது 300 பேர் ஆனால் அன்று கொல்லபட்ட தமிழர் எண்ணிக்கை பல ஆயிரம்

உலகமே மிரண்ட காலத்தில் இந்திரா துணிச்சலாக உட்புகுந்து அதை நிறுத்தி போராளிகளை இந்தியாவுக்கு அழைத்து இலங்கையினை மிரட்டி கால்பதித்தார்

ஆனால் மறுவருடமே அவர் கொல்லபட்டதில் குழப்பம் ஏற்பட்டது

சி.ஐ.ஏவின் கையாளான பிரபாகரன் இந்திய திட்டத்தை குழப்பி அமைதிபடையினை விரட்டி ராஜிவினை கொன்று என்னமோ செய்துவிட்டான்

ஆயினும் அமெரிக்கா கண் வைத்த திரிகோணமலையில் இந்தியா தன்பிடியினை இப்பொழுதும் வைத்திருக்கின்றது

2009ல் இறுதி யுத்தத்தை காட்டி ஹம்பாந்தோட்டா பக்கம் சீனா வந்தது

இப்பொழுது கொழும்பு மறுபடி எரிய அமெரிக்கா வந்து புன்னகை பூக்கின்றது

வரலாற்றை நன்கு படித்ததால் சொல்கின்றோம்

கொழும்பு கலவரத்தை பயன்படுத்தி அங்கு காலூன்ற முயன்ற இந்தியாவினை பிரபாகரனை பயன்படுத்தி அமெரிக்கா விரட்டியது

இப்பொழுது ஐ.எஸ் இயக்கம் என சொல்லி மறுபடியும் இலங்கையில் காலூன்ற வருகின்றது அமெரிக்கா சந்தடி சாக்கில் பாகிஸ்தானுக்கும் எச்சரிக்கை

இனி ஐ.எஸ் இயக்கத்தை காட்டி சீனாவினையும் ஒரு கை பார்க்க முடியும்

கவனித்தால் ஒன்று புரிகின்றதா?

புலிகளுக்கும் அமெரிக்காவுக்கும் முதலில் ஒரு புரிதல் இருந்தது பின்புதான் முறைத்தார்கள்

ஐ.எஸ் என்பது அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக தாக்கிய அமைப்பே அல்ல, அது சில காரணங்களுக்காக அமெரிக்காவால் அனுமதிக்கபடும் அமைப்பு

அது வந்தபின்பே அல்கய்தா காணாமல் போனது

ஆக புலிகளும் அதை தொடர்ந்து ஐ.எஸ்ஸும் அமெரிக்காவுக்கு இலங்கையில் எந்த அளவு உதவியாய் இருக்கின்றார்கள் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்

ஈழபோராளிகளை வைத்து இந்தியா களம்புகுந்தது போல இப்பொழுது இஸ்லாமிய இம்சைகளை வைத்து அமெரிக்கா களம் புகுந்தாயிற்று

உலக அரசியல் என்பது உள்ளூர் அரசியலை விட மர்மமும் அசிங்கமுமானது

இந்தியாவிடமும் சில திட்டம் இருக்கும், அது வட இலங்கையின் பலாலி யாழ்பாணம் திரிகோணமலை தலைமன்னார் என கட்டுபடுத்தலில் இருக்கலாம்

இனி தமிழர் ஆதரவு நிலைப்பாடு என இந்தியா அங்கு வேகமெடுக்கலாம், தமிழக காட்சிகளும் மாறலாம்

ஈழ அல்ட்ராசிட்டி இங்கு இந்திய அரசின் அனுமதியோடு திரும்பவும் வரலாம், அதை அமெரிக்கா குழப்பி அடிக்கலாம்

ஆம் வைகோ உட்பட பல இந்திய தேசிய எதிரிகள் இங்கு அமெரிக்காவுக்கு ஆதரவாக உண்டு, சில நேரம் திமுகவும் உண்டு

ஏற்கனவே சூடுபட்டிருப்பதால் இம்முறை மத்திய அரசு மிக கவனமாக களமிறங்கலாம்

வரும் காலம் அதை இனி காட்டும்.

இலங்கையில் புதிய களமுனை திறக்கபட்டாயிற்று என்பது மட்டும் உண்மை