நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

இலங்கையில் இஸ்லாமிய கொடூரர் தாக்கினாலும் இஸ்லாமியரான அமைச்சர் ரவூப் ­ஹக்கீம் என்பவர் பொறுப்பான பேச்சுக்களை பேசுகின்றார்

இதற்காக அந்த சமுதாயமே வெட்கமும் வேதனையும்படுவதாக தெரிவிக்கும் அவர், இதை ஏன் முன் கூட்டியே தடுக்கவில்லை என வருத்தமும் தெரிவிக்கின்றார்

முதலில் நாம் இலங்கையர், மதம் என்பது அரசாங்கம் கொடுத்திருக்கும் வழிபாட்டு உரிமை, அதை நாட்டுக்கு எதிராக பயன்படுத்த கூடாது எனும் பண்பான பேச்சுக்கள் அவரிடம் இருந்து வருகின்றன‌

ஆம் அரசாங்கம் கொடுத்திருக்கும் மத உரிமையினை நாட்டுக்கு எதிராக பயன்படுத்துவது மாபெரும் தவறு

என்ன அழகான பொறுப்பான வார்த்தைகள்?

இப்படி ஒரு நல்ல தலைவன் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருப்பானா?

7 தமிழ் தீவிரவாதியினை விடுவி என ஒரு கும்பல் சொல்லும் பொழுது அருகிருந்து அந்த அல் உமா கோஷ்டியினையும் விடுவியுங்கள் என கண்ணடிப்பவனே இங்கு இருக்கின்றான்

நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்