செர்னோபில் துயரம்
நாளை அனுசரிக்கபடும் அந்த செர்னோபில் துயரம் எனப்படும் வரலாற்றில் நீங்காத பெரும் துயரமான அணுவுலை விபத்திற்கு இப்பொழுதே பலர் அஞ்சலி செலுத்த தயாராகிவிட்டது
உலகம் முதன் முதலில் கண்ட அணுவுலை ஆபத்து அது
அது அணுகுண்டோ அணுவுலையோ இரண்டுமே ஆபத்துதான், அதன் தன்மை அப்படி
மானிட சமூகமே இன்று அச்சபடும் விஷயம் அது, பல நாடுகள் ஏராளமான அணுகுண்டுகளை வைத்திருந்தாலும் அவற்றை எளிதில் தூக்கி போடமுடியாது, எல்லாம் பயமுறுத்தும் ஆயுதம் மட்டுமே
நிச்சயம் ஒரு காலத்தில் அது பயன்படுத்த கூடும், அதில் மானிட இனம் முற்றிலுமாக அழியவும் கூடும் அவ்வளவு ஆபத்தான விஷயம் அணு நுட்பம்
இன்று காணும் எல்லா அறிவியல் தத்துவங்களையும் புராண கதை என சொல்லி அவற்றின் ஆபத்துக்களையும் ஆனால் அவற்றிற்கு தீர்வும் உண்டு என சொன்னது இந்துமதம்
பாரத போரில் அது பிரமாஸ்திரமாக வருகின்றது, அர்ஜூனனும் அஸ்வத்தாமனும் அதை வைத்திருக்கின்றார்கள்
அது பெரும் அழிவுகொடுகும் ஆயுதம் சந்தேகமில்லை, ஆனால் கட்டுபடுத்தும் வித்தை அர்ஜூனனுக்கு தெரிந்திருக்கின்றது, அவன் நிதானமாக இருந்திருக்கின்றான்
ஆனால் அஸ்வத்தாமனுக்கு வீச தெரியுமே தவிர கட்டுபடுத்த தெரியவில்லை, விளைவு அவன் வீசிய பிரமாஸ்திரத்தில் பெரும் அழிவு அர்ஜூனன் மனைவி கருவினை மட்டும் பகவான் காக்கின்றார்
அதாவது கவனித்து பார்த்தால் புரியும் விஷயம் இதுதான், அதாவது பிரம்மாஸ்திரம் கட்டுபடுத்த கூடியது அப்படி பின்னாளில் அணுசக்திக்கும் கடிவாளம் வரலாம்
இன்னொரு கதை அனுவின் நுட்பம்
அணுவின் தன்மை என்ன? அதை பிளந்தால் இன்னொரு அணு உருவாகும், அதை பிளக்க இன்னொன்று அப்படி வேகமாக பெருகி பெருகி ,அந்த அணுக்கள் பெரும் எண்ணிக்கையில் சங்கிலி தொடராக பெருகுவதுதான் அணுகுண்டு தத்துவம்
அது பிளக்கபடும் பொழுது வெளிவரும் ஆற்றல்தான் அணு ஆற்றல், கோடிகணன்னான அணுக்கள் உருவாகும் பொழுதும் பிளக்கபடும் பொழுது பெரும் ஆற்றலே அணுவெடிப்பு
இந்த அறிவியல் புராணத்தில் ரத்தபீஜன் கதையில் வரும்
அதாவது ரத்தபீஜன் என்றொரு அரக்கன் இருந்தான் அவனுக்கொரு வரம் உண்டு, விசித்திரமான வரம்
அவனை வெட்டினால் அவன் உடலிலின் ரத்த துளி மண்ணை அடைந்ததும் இன்னொரு ரத்தபீஜன் வருவான், அவனை வெட்டினால் அவன் ரத்த துளியிலிருந்து இன்னொருவன்
ஆக யுத்தகளத்தில் அவன் பெருகிகொண்டே இருப்பான், வெட்டினால் ரத்தம் வரும் அது மண்ணுக்கு போகும் அதில் ஒரு ரத்தபீஜன் வருவான், அதிலிருந்து இன்னொன்று என ஆயிரகணக்கான பீஜன்கள் நொடியில் உருவாகி மாபெரும் சேனையாகிவிடுவார்கள்
அணு நுட்பத்தில் காணும் அதே காட்சி ரத்த பீஜன் கதையிலும் உண்டு
அந்த ரத்த பீஜனை அன்னை காளி எப்படி அடக்கினாள் என்றால், அவன் ரத்தம் மண்ணில் சிந்தாதபடி குடித்துவிட்டாள்
மண்ணை அவன் ரத்தம் தொட்டால்தானே புதிய ரத்தபீஜன் வருவான், மண்ணை தொடும் முன் குடித்தால்..
இப்படி அவனை பலவீனபடுத்தி அவனை காளி அளித்தாள் என்கின்றது புராணம்
விஞ்ஞானம் இன்று தலையினை போட்டு இதில்தான் உடைக்கின்றது, அணு உருவாக ஒரு வழி உண்டென்றால் அதை தடுக்கவும் ஒரு வழி இருக்க வேண்டும் அல்லவா?
ஆக அன்னை காளி ரத்த பீஜனை பலுகி பெருக விடாமல் தடுத்தது போல அணுவினை கட்டுபடுத்தும் நுட்பமும் பின்னாளில் வரலாம்
நிச்சயமாக வரலாம் , சாத்தியமல்லாத விஷயம் என ஏதுமில்லை
அணுவுக்கு ஒரு முடிவு உண்டு என இந்துமதம் தன் வழக்கமான விஞ்ஞான தத்துவத்தை கதைகளில் ஒளித்து வைக்கும் முறையில் வைத்திருகின்றது
ஒரு நாளில் அது நிச்சயம் நடக்கலாம்
அதுவரை அணுவுலையும் அணுகுண்டும் உலகை பயமுறுத்திகொண்டே இருக்கும்
ரத்தபீஜனுக்கு முடிவு சொன்ன காளியின் அருளில் ஒரு விஞ்ஞானி வரும்பொழுது இவற்றிற்கு எல்லாம் முடிவு கட்டபடும்
எல்லா விஞ்ஞான வடிவங்களுக்கும் அவற்றின் சவால்களுக்கும் இந்துமத கதைகளில் வடிவமும் அவற்றிற்கான முடிவும் இருக்கத்தான் செய்கின்றது
கூர்ந்து படிக்கத்தான் இங்கு யாருமில்லை, ஆனால் மேல்நாடுகளில் மிக கவனமாக இவற்றையும் ஒரு கண்ணால் பார்த்துகொள்கின்றார்கள்
அவர்கள் கருத்துபடி அறிவியல் அற்புதம் நிரம்ப கிடக்கும் மதம் இந்துமதம் ஒன்றே..