இன்னும் பின் அலைகள் அடித்துகொண்டிருக்கின்றன
இலங்கையில் நிலமை சுனாமிதாக்கியது போல் இருகின்றது, இன்னும் பின் அலைகள் அடித்துகொண்டிருக்கின்றன
இன்னும் ஏராளமான தீவிரவாதிகள் பதுங்கியிருக்கின்றனர், அவர்களில் சிலரை பிடிக்க ராணுவம் முற்றுகையிட்ட பொழுது துப்பாக்கி சண்டை எல்லாம் நடந்திருக்கின்றது, இருவர் பலி
இந்த சண்டாளர்கள் இந்தியா தப்பலாம் என்பதால் கடும் பாதுகாப்பு எனினும் ராமநாதபுரம் பக்கம் சில பாம்புகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல்களும் உண்டு
இந்தியாவிலும் கடும் பாதுகாப்பு
இலங்கை அரசு இரு விஷயங்களுக்காக அஞ்சுகின்றது முதலாவது சமூக ஒற்றுமை இரண்டாவது இலங்கை பொருளாதாரம்
ஆம் சுற்றுலாதுறை அடிவாங்கி கிடக்கின்றது, சுற்றுபயணிகள் நாம் தமிழர் ஆடியோ கேட்ட கட்சிக்காரர்களாக தெரித்து ஓடுகின்றனர், விமானங்கள் வைகோ கட்சி போல காலியாக கிடக்கின்றது
இன்னும் 3 வருடம் ஆகலாம் ஆனால் அதுவரை ஓலைவெடி கூட வெடிக்க கூடாதே என்ற கவலையில் இருக்கின்றது இலங்கை
ஆனாலும் எங்களுக்கு பணிந்து போ, தென் கொரியா சிங்கப்பூர், தைவான் போல உன்னை பெரும் பணக்கார நாடாக ஆக்குகின்றேன் என சில சக்திகள் அவர்களை நோக்கி கண் சிமிட்டுகின்றன
அவர்கள் எதிர்பார்ப்பதும் அதுதான், இலங்கை
யோசிக்கின்றது.
அரசு யோசிக்கும் இன்னொரு விஷயம் உள்நாட்டு கலவரம்
சில இடங்களில் இஸ்லாமியர் மேல் தாக்குதல் நடந்திருகின்றது, எனினும் இஸ்லாமியர் அமைதி
தமிழர் சிங்களர் வீடுகளில் கருப்பு கொடியும், இஸ்லாமியர் வீடுகளில் எங்களை தாக்காதீர் என வெள்ளை கொடியும் பறக்கின்றது
இந்நிலையில் ஒரு மனிதர் உலக கவனம் பெறுகின்றார், அவர் இலங்கை ஆயர் ஜோசப் கண்ணையா
ஏகபட்ட கிறிஸ்தவர் இறந்திருக்கும் வேளையில், கிறிஸ்தவ ஆலயங்கள் தகர்க்கபட்ட நிலையிலும் அவர் மனமுருகி வேண்டுகின்றார்
ஆம் அம்மனிதன் உண்மையான கிறிஸ்தவன், உண்மையான துறவி
அவன் காலை தொட்டு வணங்க கூட இங்குள்ள பாதிரிகளுக்கு தகுதி இல்லை, பிரிவினை கோஷ்டிகளுக்கும் கொஞ்சமும் இல்லை
ஆம் அந்த மனிதனின் உருக்கமான கூக்குரலில் இலங்கை மருவி நிற்கின்றது, அம்மனிதன் சொல்கின்றான்
“யார் மேலும் எங்களுக்கு கோபமில்லை, எள் முனையேனும் கசப்பே இல்லை
இது அன்பின் மதம், பொறுமையின் உச்சம்.
பெருமான் இயேசு அதைத்தான் சொல்லியிருக்கின்றார், உங்களை துன்புறுத்துவர்களுக்காக ஜெபியுங்கள் , உங்களை அடிப்பவர்களுக்காக நன்றி கூறுங்கள்
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு
இயேசுவே சிலுவையில் மரிக்கும்பொழுது தன்னை கொன்றவர்களுக்காக் பிரார்த்தித்தார்
நாங்களும் அதையே சொல்கின்றோம், அவர்களை இறைவன் மன்னிக்கட்டும்
அந்த கொலையாளிகளுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கின்றோம்
இந்த நாடு கடந்த 10 ஆண்டுகளாகத்தான் அமைதியினை பார்க்கின்றது, அதுவும் மும்மதங்களும் சகோதரத்துவமாக வாழ்ந்த இடம் இது
அது தொடரட்டும், இஸ்லாமிய சகோதரர்களை நாங்கள் நேசிக்கின்றோம், அவர்கள் மேல் சந்தேகம் எக்காலமுமில்லை இனியுமில்லை
துயரத்தில் இருக்கும் அம்மக்களுக்கு நாங்கள் ஆறுதலும் பாதுகாவலுமாக இருக்கின்றோம்”
எப்படிபட்ட கிறிஸ்தவ தாக்கம் மிகுந்த பேச்சு, எவ்வளவு அன்பான வார்த்தைகள்
இந்த உலகில் உண்மையான கிறிஸ்தவன் இன்னும் இருக்கின்றான் என்பதற்கு அந்த ஜோசப் கண்ணையா என்பவர் சாட்சி
ஒரு நல்ல கிறிஸ்தவனை வாழ்வில் கண்டுவிட்ட மகிழ்வில் அவன் இருக்கும் திசை நோக்கி வணங்குகின்றேன்
அந்த அழகிய தீவு மீண்டு வரட்டும், அந்த அயலக உறவுகள் வாழ்வில் மறுபடியும் வசந்தம் வீசட்டும்