உலக வழக்கம் இது
இஸ்லாமியர் என்றாலே கொடூரமானவர்கள் என்றும் கொள்ளை அடிப்பவர்கள் என்றும் ஆலயங்களை நொறுக்கி தீக்கிரையாக்குவார்கள் என்றும் ஏகபட்ட பேர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
உண்மை அது அல்ல, அக்காலத்தில் மதகுருக்களின் மறைமுக ஆட்சியில் ஆலயமே செல்வங்களின் பொக்கிஷங்களின் கஜானாவாக இருந்தது
ஆலயங்களை உடைத்து புதையலை தேடுவது அக்கால வழக்கம், சாலமோன் அரசனின் ஆலயத்தை நெபுகாத்நேச்சர் எனும் பாக்தாத் மன்னன் அப்படித்தான் உடைத்தான்
அனுராதாபுர புத்த விகாரையினை ராஜராஜ சோழன் அப்படித்தான் கொள்ளையடித்து வந்தான்
அலெக்ஸ்டாண்டரும், நெப்போலியனும் எகிப்தின் கல்லறைகளையும் ஆலயங்களையும் விடாமல் நொறுக்க்கி தேடினார்கள்
உலக வழக்கம் இது
ஆப்கனின் கஜினி எனும் ஊரில் இருந்த முகமது எனும் அரசனும் அதை செய்யவே இந்தியா வந்தான்
கிட்டத 17 முறை அவன் படையெடுத்தான் , சிலமுறை தோல்வி சிலமுறை சிறிய வெற்றி
அவன் ஒன்றும் மாவீரன் அல்ல, அப்படி இருந்திருந்தால் இங்கே தன் சாம்ராஜ்யத்தை அமைத்திருப்பான், அவனோ சிறிய குழுவோடு வந்து கொள்ளையிட்டு ஓடிபோகும் கொள்ளையனாய் இருந்தான்
மாலிக்காபூர் மதுரை ஆலயத்தை உடைத்ததும் அவ்வகையே
உமர் அலி எகிப்தை தாக்கியதும் அப்படியே
இந்த நாதிர்ஷா மற்றும் தைமூர் எல்லாம் அப்படித்தான் இந்தியா மேல் பாய்ந்தார்கள்
அது அக்கால வழக்கம், 1400 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் இல்லை , அப்பொழுதும் ஆலய கொள்ளைகளும் இன்னும் பலவும் நடந்தன
செங்கிஸ்கான் செய்திருக்கும் கொடூரம் ஏராளம் அவன் என்ன இஸ்லாமியனா?
இல்லை
போர் என நாகரீகமாக சொன்னாலும் அதன் பெயர் கொள்ளை முயற்சியே
அதை பின்னால் வந்த அரேபிய மன்னர் செய்தார்கள் அவ்வ்வளவுதான் விஷயம்
ஐரோப்பாவில் நடக்கா போரா? இரு உலகபோரே அவர்கள்தான் நடத்தினார்கள் அது பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள்
இதெல்லாம் மானிட விதி, வலுத்தவன் வெல்லும் காட்சி
ஆனால் இக்கால இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்களுக்கு முதல் காரணம் கச்சா எண்ணெய் மற்றும் உலக அரசியல்
ஆம் இங்கு எதுவும் மதத்துக்காக நடப்பது அல்ல
எண்ணெயால் கொழுத்துவிட்ட அரபுலகம் இஸ்லாமிய நிதி என அள்ளிகொடுக்கின்றது, அதை வைத்து சிலர் சில காரியங்களை செய்யும் பொழுது பல பன்னாட்டு சக்திகள் தவறான வழிகாட்டுகின்றன
மார்க்க நெறியிலிருந்து அவர்களை சாத்தானின் வழிக்கு இழுத்து செல்கின்றன
இவர்களும் அந்த தவறான உபதேசத்தில் மயங்கி இந்த படுபாதக செயல்களை செய்கின்றார்கள்
அரபு உலகின் கடைசி சொட்டு எண்ணெய் தீரும் வரை அல்லது எண்ணெய்க்கு மாற்று பொருள் கண்டுபிடிக்கும் வரை இச்சிக்கலுக்கு தீர்வு இல்லை
இஸ்லாமிய பெருமக்களே ஒப்புகொள்ளும் விஷயம் எமது போதகர்களிலே கடும்போக்கான போதகர்கள் யாராலோ உருவாக்கபட்டு எப்படியோ வழிநடத்தபட்டு எம் மக்களில் சிலரை சைத்தானிய வழிக்கு இழுத்து செல்கின்றார்கள் என்பது
ஆம் இவர்கள் யார்? யாரால் உருவாக்கபடுகின்றனர்? இவர்களுக்கான வெடிபொருள் முதல் இலக்கு வரை யாரால் நிர்ணயிக்க படுகின்றன?
இவற்றை எல்லாம் கவனமாக பாருங்கள் அது அரபு அரசியல் மற்றும் எண்ணெய் பணம் என்றுதான் முடியும்
அதுதான் சமீபகால குழப்பங்களுக்கு காரணம்
மற்றபடி இஸ்லாமியர் என்றாலே அவர்கள் வன்முறையாளர் என சொல்வது சரியல்ல
ராஜராஜ சோழனுக்கு ஈழத்தில் என்னவேலை? அலெக்ஸாண்டருக்கு ஆசியாவில் என்ன சோலி
செங்கிஸ்கானுக்கு ரஷ்யாவில் என்ன ஆட்சி?
ஆக அந்த வரிசையில் இஸ்லாமிய மன்னர்கள் ஆண்டால் மட்டும் அது மத வன்முறையா ? அல்ல
இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்
இந்து மன்னர்கள் ஏன் இப்படி பெரும் அடையாளமில்லை என கேட்டால் விஷயம் சிக்கலானது
பண்டைய இந்துக்களில் அப்படி மன்னர் இருந்தனர் ஆனால் பிற்காலத்தில் இந்த புத்த மதமும் சமணமும் இந்தியாவினை ஆட்கொண்டது
அதன் தாக்கத்தில் நாடு பிடித்தல் பெரும் போர் நடத்துதல் என இந்தியா செல்லவில்லை
ஆதிசங்கரர் எழுச்சிக்கு பின் இந்துமதம் தழைத்து ஓங்கினாலும் வளமான கங்கா, சிந்து கோதாவரி காவேரி என சுகமான ஆட்சி செய்த மன்னர்களுக்கு அடுத்த நாட்டை பிடிக்கும் அவசியம் இல்லை
ஆம் எல்லா கொள்ளை அரசுகளும் ஒன்றுமில்லா பாலை நிலம் அல்லது கடும்குளிர் தேசத்தில் இருந்துதான் உருவாகும்
இந்தியா செழிப்பான நாடு என்பதால் அடுத்தவனை கொள்ளையிட அவசியமில்லை
ராஜ ராஜ சோழன் போன்ற ஒரு சிலரே பிற்காலத்தில் மதத்துக்காக அதிலும் வியாபாரத்திற்காக யுத்தம் நடத்தியிருக்கின்றார்கள்
மற்றபடி இந்தியாவில் அன்று எல்லாம் இருந்ததால் அண்டை நாட்டில் கொள்ளையிடும் அவசியம் இல்லை
இந்த இஸ்லாமிய தீவிரவாதமெல்லாம் வெறும் 40 ஆண்டுகளுக்கு முன்புதான் தீவிரமாயின
ஆம் எண்ணெய் பணம் கொட்ட கொட்ட படுதீவிரமாயின அதுவும் சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின் பேயாட்டம்
ஆனால் ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கு பின்னும் ஒரு வல்லரசு அதனால் பெரும் பயன்பெறும்
அதை ஆழ கவனியுங்கள் இஸ்லாமியர் மேல் உங்களுக்கு பரிதாபமே மிஞ்சும்