AWACS (Airborne Warning and Control System
இந்திய விமானபடையும் பாதுகாப்பு அமைப்பும் கூடுதல் சில ரக AWACS (Airborne Warning and Control System) உளவு விமானங்கள் வேண்டும் என அரசிடம் கேட்டிருக்கின்றன
இன்றல்ல சில ஆண்டுகளாகவே கேட்டுகொண்டிருகின்றன, அது விலை அதிகம் என்பதால் மன்மோகன் சிங் அரசும் அமைதி, ராமர் கோவில் கட்ட பணமில்லா நிலையில் இதுவுமா? என மோடி அரசும் கனத்த அமைதி
இந்தியாவிடம் உளவு விமானம் உண்டு எண்ணிக்கை 5
ஆனால் பாகிஸ்தானிடம் 7 உண்டு, அதுதான் வைப்பாட்டி ஜாதகம் கொண்ட நாடு அல்லவா? கொட்டுவார்கள்
சீனாவிடம் 30 விமானம் உண்டு
ஆக 37 விமானங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இந்தியாவிடம் 5 இருப்பது மிக மோசமான விஷயம்
இந்த இடத்தில் இஸ்ரேல் கைகொடுக்கின்றது, பாகிஸ்தானின் உளவு விமானம் 270 டிகிரி பார்க்க கூடியது, இஸ்ரேலோ 360 டிகிரி அளவு வரை பார்க்கும் வலுவான உளவு நுட்பத்தை தர தயாராகின்றது
அதாவது ரஷ்யாவிடமிருந்து விமானத்தை வாங்கும் இந்தியா அதில் இஸ்ரேலிய நுட்பத்தை புகுத்தும், இரண்டையும் ஒரே இடத்தில் வாங்கினால் நிதித்துறை தலையில் துண்டை போட்டு கொள்ளும்
மத்திய அரசு விமானபடையின் கோரிக்கைக்கு செவி சாய்த்து இரு விமானங்களை முதலில் வாங்க பரிசீலிக்கின்றார்கள்
தேர்தல் முடிவுக்கு பின் விஷயம் முழுமை பெறும்
நிச்சயம் பெரும் பணம் ஒதுக்கபடும் நவீன தொழில்நுட்ப திட்டம் என்பதால் விலை பட்டியலில் பின்னாளில் விலை அதிகரிக்கலாம் வாய்ப்பு உண்டு
எதற்கும் Awacs விமான முறைகேடு என அடுத்த ஊழல் சர்ச்சை வெடித்தாலும் வெடிக்கும் , அப்படிபட்ட நாடு இது
