ராணுவ சீருடையுடன் தீவிரவாதிகள் கைது
இலங்கை ராணுவ சீருடையுடன் அங்கு தீவிரவாதிகள் கைது செய்யபடுவது அதிகரிக்கின்றது
கடும் வேட்டையில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை கண்டறிந்து சோதனை செய்தால் அங்கு வெடிகுண்டுகளும் ராணுவ உடைகளுமே சிக்குகின்றன
ராணுவ உடையில் தாக்குதல் நடத்த அவர்கள் கடும் ஆயத்தமாகியிருப்பது புரிகின்றது என்பதால் அதிர்ந்து கிடக்கின்றது இலங்கை
இம்மாதிரி தாக்குதலை இலங்கையில் தொடங்கி வைத்தவர்கள் யார் தெரியுமா?
சாட்சாத் புலிகள்
ஆம் அவர்களின் முதல் பிரசித்தி பெற்ற நடவடிக்கையே இப்படித்தான் தொடங்கியது
அது பிரபாகரன், செல்லகிளி, விக்டர் என முதல் டீமின் அதிரடி நடவடிக்கை
அப்பொழுது புலிகளிடம் பாரிய வெடிபொருள் கிடையாது, இங்கு சிவகாசியில் இருந்து கடத்தி செல்லும் வெடிபொருளும் பலத்த சேதமில்லை
அப்பொழுது வட இலங்கையில் சிமென்ட் ஆலை இருந்தது அங்கு பாறைகளை தகர்க்கும் வெடிபொருட்கள் இருப்பதை அறிந்தனர் புலிகள்
இலங்கை ராணுவ உடையில் விக்டர் எனும் புலியும் சிலரும் ராணுவம் போலவே அந்த ஆலையில் புகுந்து அரசு உத்தரவு அது இது என சிங்களத்தில் பேசி பெரும் பகுதி வெடிபொருளை கடத்தி வந்தார்கள்
முதலில் அதை வழக்கம் போல சிங்கள அரசு கண்டுகொள்ளவில்லை
ஆனால் அந்த சிமென்ட் ஆலையின் வெடிபொருள்தான் இலங்கையில் பலத்த அதிர்சியினையும் 30 ஆண்டுகால போருக்கும் தொடக்கமாக அமைந்தது
ஆம், அந்த வெடிபொருளில்தான் யாழ் திருநெல்வேலியில் தங்கள் முதலாவது பெரும் தாக்குதலான அந்த ராணுவத்திற்கு எதிரான தாக்குதலை நடத்தி 13 பேரை கொன்றனர் புலிகள்
அதன் எதிரொலிதான் வெலிக்கடை சிறை கலவரம், கொழும்பு கலவரம் இன்னபிற, கிட்டதட்டல் 8 ஆயிரம் தமிழர் கொல்லபட்டு பெரும் அழிவு
அதன் பின்புதான் இந்தியா தலையிட்டதும் போராளிகளுக்கான பயிற்சி இன்னபிற
ஆக ராணுவ உடையில் இலங்கை அரசை ஏமாற்றும் புலிகளின் தந்திரத்தையே இப்பொழுதும் ஜிகாதிகள் செய்கின்றனர்
இந்த தந்திரம் முதலில் இருந்தாலும் கடைசி கட்டத்திலும் அதை புலிகள் செயல்படுத்தினர்
ராணுவத்தில் இருந்த சிங்கள கைகூலிகளை வளைத்த புலிகள் இலங்கை ராணுவ உடையில் மனித வெடிகுண்டுகளை அனுப்பினர்
சில வெடித்தன என்றாலும் கோத்தபாய தப்பித்தார்
சில வெளிநாட்டு உளவு அமைப்புகள் கொடுத்த தகவலில் இலங்கை ராணுவம் சில புலிகளின் தற்கொலைதாரிகளை கைது செய்தனர்
அவர்கள் அந்த “ஆர்மி அங்கிள்”களை கைகாட்டினர்
அந்த ஆர்மி அங்கிள் எனும் கருப்பாடுகளை கைது செய்து களையெடுத்த பின்புதான் புலிகளால் பெரும் தற்கொலை தாக்குதலை கொழும்பில் நடத்த முடியவில்லை, ராஜபக்சேயும் தப்பித்தார்
அன்று இலங்கை ராணுவ உடையில் வந்த புலிகளை கையாண்ட விதம் இப்பொழுது கொழும்புக்கு கைகொடுகின்றது
புலிகள் எவ்வளவு நல்ல விஷயத்தை சிங்களனுக்கு செய்திருக்கின்றார்கள் பார்த்தீர்களா?
இப்பொழுது தீவிரவாதிகள் ராணுவ உடையுடன் பிடிபடும் பொழுதெல்லாம் “இதை புலிகாலத்திலே பார்த்துவிட்டோம் வாங்கடா…” என இழுத்து செல்கின்றது சிங்கள ராணுவம்
மனதிற்குள் புலிகளுக்கு நன்றி சொல்லாமலா இருப்பார்கள்?