இதுவா உண்மை?
இதை எழுதி பரப்பிகொண்டிருப்பது தும்பி கூட்டம் தவிர யாரும் அல்ல
இதுவா உண்மை? சத்தியமாக இல்லை
இங்கு ஏராளமான முறை அந்நியர் ஆட்சி இருந்தது, அது அசோகர் காலத்தில் இருந்தது இன்னும் ஏகபட்டோர் காலத்தில் இருந்தது
இங்கு புத்தமும் சமணமும் ஆண்ட காலத்தில் தமிழகம் வடக்கே இருந்த புத்த சமண சாம்ராஜ்யங்களின் ஒரு அங்கமாகவே இருந்தது
பின்னாளில் தமிழகத்தை ஆண்ட பல்லவர் கூட தமிழர் அல்ல
இந்த களபிரர்கள் காலம் என்பது என்னவென்று இன்னும் ஒருபயலும் சொல்லவில்லை
ஏன் இந்த சேர சோழ பாண்டியர் பலமுறை காணாமல் போனார்கள் பின் வந்தார்கள் என்றால் வழிநெடுக அன்னியர் ஆட்சி இங்கு நடந்த சுவடு கிடக்கின்றது
அதுவும் கிபி 1300களில் பாண்டிய, சோழசாம்ராஜ்யம் வீழ்ந்தபின் தமிழகம் விஜயநகர ஆளுமைக்கு உட்பட்டது, அது நெடுங்காலம் நீடித்தது
இடையில் சிவாஜியின் மராட்டிய பேரரசில் தஞ்சையும் இருந்தது
அதன் பின் மொகலாயர் ஆட்சியில் அவனின் ஐதராபாத் நிஜாமின் நிர்வாக பிரிவுக்கு கீழ் இருந்தது, அவனுக்கு அடுத்து இருந்தது ஆற்காடு நவாப்
ஆற்காடு நவாபிற்குத்தான் தென்னக நாயக்க மன்னர்கள் கப்பம் கட்டிகொண்டிருந்தனர்
அந்த நவாப்பினை வளைத்தான் ராபர்ட் கிளைவ், ஆம் அவனின் ஆற்காடு போர்கள்தான் அந்த வெற்றிதான் இங்கு ஆங்கிலேயன் ஆட்சியின் அடித்தளம்
ஆக ஆங்கிலேயன் இந்தியாவினை ஆள அடித்தளம் கொடுத்ததே ஆற்காடு நவாபுக்கு உட்பட்ட தமிழகம்.
ஆற்காடு நவாப் டெல்லி ஆலம்ஷாவிற்கு கட்டுபட்டவனாய் இருந்தான்
ஆக வெள்ளையன் வரும்பொழுது கூட தமிழகம் மொகல் ஆட்சிக்கு உட்பட்டதாகவே இருந்திருக்கின்றது, பின்பு வெள்ளையன் ஆட்சிக்கு வந்தது
இன்னொன்று இது இப்பொழுது இருக்கும் தமிழக மேப் போல இருந்ததே இல்லை
ஏகபட்ட அரசுகள் ஆளாளுக்கு ஒரு வரைபடம் என அது எப்படியோ இருந்தது
தும்பிகள் காட்டும் தமிழகம் மொழிவாரிமாநில பிரிவுக்கு அதாவது 1957க்கு பிற்பட்ட தமிழக வரைபடமே, அதற்கு முன்பு சென்னை மாகாணம், அதற்கு முன் ஏகபட்ட துண்டுகள்
உண்மை இப்படி இருக்க, இந்த விஷ தும்பிகள் எப்படி எல்லாம் கத்தி திரிகின்றன பார்த்தீர்களா?
அவை ஒரு தனி உலகத்தில் இருக்கின்றன, அவர்களுக்காக ஒரு வரலாறு, அவர்களுக்காக ஒரு வரைபடம்
பொதுவாக பைத்தியங்கள் ஒன்று சேராது, நம் துரதிருஷ்டம் இங்கு சேர்ந்துவிட்டன அவ்வளவுதான்