தீவிரவாதிகளிடம் கெஞ்சுகின்றார் மைத்திரிபால
இந்த சிறிய நாட்ட்டை விட்டுவிடுங்கள் என கண்ணுக்கு தெரியாத தீவிரவாதிகளிடம் கெஞ்சுகின்றார் மைத்திரிபால
பொதுவாக இலங்கைக்கு எந்த சிக்கல் என்றாலும் இந்தியதான் முதலில் செல்லும், இலங்கையும் அதைத்தான் விரும்பும்
ஆனால் இந்தியபிடி இறுகும்பொழுது அதில் சிக்காமல் பாகிஸ்தான் அமெரிக்கா சீனா என சென்றுவிட்டு மறுபடியும் இந்தியாவிடமே வரும்
இந்த ஜேவிபி கிளர்ச்சியினை இந்தியா அப்படி முறியடித்தது, பின்பு ஈழபோராளிகள் இலங்கை சமாதான ஒப்பந்தத்தை இந்தியாதான் செய்தது
ஆனால் பிரபகாரனின் அழிச்சாட்டியத்தில் என்னவெல்லாமோ நடந்தது
இப்பொழுதும் முதலில் தகவல் தந்தவர்கள் என்ற முறையிலும், இலங்கையினை அவர்களை விட மிக உன்னிப்பாக கவனிக்கின்றவர்கள் என்ற முறையிலும் இந்தியாவிடம் சில உதவிகளை கோருகின்றது இலங்கை
அதில் National Investigation Agency (NIA) உதவி வேண்டும் என்கின்றது, இந்தியாவோ National Security Guard (NSG) எனும் அமைப்பையும் சேர்ந்து அனுப்ப தயாராகின்றது
ஆனால் NIA போதும் வேண்டாம் NSG என்பது போல இலங்கையில் நெளிதல் உள்ளது, இந்திய கணக்க்கின் சில விவகாரங்கள் அவர்களுக்கும் புரியலாம்
ரணில் விக்கிரமசிங்கே இரண்டுமே வரட்டும் என்கின்றார், மைத்திரிபால கனத்த அமைதி
ஆனால் மகிந்த ராஜபக்சே இந்தியாவின் NSG வரவே கூடாது என பெரும் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கின்றார்
அவருக்கு என்ன பயம்? எதுவாக இருக்கும்
அட இதை ஊகிப்பது உங்களுக்கு கஷ்டமா? தமிழகத்தில்தானே இருக்கின்றீர்கள்?
ஆம் மாறுவேடத்தில் கொழும்பு சென்று அவர்களிடம் சிக்காத சாகசகாரனும், ஏகே 74 துப்பாக்கியனை இயக்கிய ஒரே இந்தியனும் இன்னும் பிரபாகரனின் கை துப்பாக்கியால் வானத்து செயற்கைகோளை வீழ்த்தியருமான அங்கிள் சைமனின் பேச்சுக்களை கேட்டிருப்பீர்கள் அல்லவா?


ராஜபக்சேவினை எப்படி எல்லாம் மிரட்டுவார்
ஒருவேளை இந்தியாவின் NSG வந்தால் அதில் மாறுவேடத்தில் கலந்து செல்லும் சைமன், “நான் பிரபாகரன் தம்பிடா.. எப்படி வந்தேன் பார்த்தியா? சாவுடா” என மனிதவெடிகுண்டாக வெடித்தால் என்னாகும்?
அதற்குத்தான் ராஜபக்சே நிரம்ப யோசிக்கின்றார், ஏனென்றால் இரண்டும் இப்பொழுது சென்னையில்தான் தயார் நிலையில் இருக்கின்றது
ஆக ராஜபக்சே அஞ்ச வேறு ஏதும் காரணம் இருக்கவே முடியாது.