கூட்டணி ஆட்சி?
தேர்தல் முடிவுகள் பாஜக அறுதிபெறும்பான்மையினை பெறாது ஆனால் கூட்டணி ஆட்சியினை அமைக்கும் அளவு பலம் பெறும் என்கின்றார்கள்
பாஜகவின் தந்திரம் லாகவானது, தனிபெரும்பான்மை என்றால் அத்வானி மோடி என பிம்பங்களை முன் நிறுத்துவார்கள்
கூட்டணி என்றால் வாஜ்பாய், நிதின் கட்காரி போன்ற மிதவாதிகளை முன் நிறுத்துவார்கள்
நிச்சயம் ஆட்சிக்கு உதவி தேவை எனில் திமுகவுக்கும் தூதுவிடபடும், ஸ்டாலின் எப்படி எதிர்கொள்வாரோ தெரியாது
கலைஞர் இருந்தால் இப்படித்தான் சொல்லிகொண்டே நகர்வார், மந்திரிசபையில் இடம் என இவர் நிபந்தனை விதிப்பார், ஆனால் எழுதுவதும் பேசுவதும் எப்படி இருக்குமென்றால்..
“ஒடுக்கபட்டோரும் வாழ வக்கற்றவரும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என போராட வந்தவர் பெரியார், அவரின் பாதிப்பு திராவிட திருநாடு தாண்டி இந்திய பெருநாடெங்கும் வளர்ந்தது
அதில்தான் செக்காணி செட்டி என்ற பின் தங்கிய ஏழை சமூகத்து மகன், தேநீர்கடையின் அடிமட்ட தொழிலாளி ஒருவன் பிரதமரானதை நாடு கண்டது
அப்படிபட்ட பல புரட்சிகளை ராமானுஜர் காலம் போல இப்பொழுதும் செய்துகொண்டிருக்கும் கட்சி பாஜக
அவர்கள் இந்த ராமர் கோவிலை தொடமாட்டோம், மாட்டுகறிக்காக மனிதனை கொல்லமாட்டோம், இந்தியினை வருந்தி திணிக்கமாட்டோம் என நமக்கு வாக்குறுதி கொடுத்திருப்பதாலும்
இன்னொரு தேர்தலை நாடு தாங்காது என்பதாலும், தமிழகம் கடந்த 8 வருடமாக கழக ஆட்சி இல்லாது கடும் துயரில் இருக்கும் கொடுமையினை போக்கும் கடப்பாடு இருப்பதாலும் முழுக்க நாட்டு நலம் மற்றும் தமிழக நலனுக்காக இம்முடிவினை திமு கழகம் எடுக்கின்றது..
இதில் தமிழக நலனுக்காகவும் பல்வேறு நலதிட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவருவதற்காகவும் அந்த மந்திரி சபையில் திமுகவும் பங்கேற்க வேண்டும் என கட்சியின் பொதுகுழுவும் செயற்குழுவும் வலியுறுத்துவதால் அது பற்றி பின்பு முடிவெடுக்கபடும்…”