அரசியலில் இருவரை ஒப்பிட்டு பார்க்கலாம்
அரசியலில் இருவரை ஒப்பிட்டு பார்க்கலாம், ஒருவர் திறமையானவர் ஆனால் இருக்குமிடம் சரியில்லை, ஒருவர் அவ்வளவு திறமையானவர் அல்ல ஆனால் இருக்குமிடம் மிக சிறப்பான இடம்
ஆம் அந்த லல்லுபிரசாத் யாதவ் என்பவர் அப்பொழுதே நிறைய கற்றிருந்தார், திறமையான ஆசாமிதான்
ஆனால் கடும் ஏழ்மையும், பிற்போக்குதனமும், கல்வியுமற்ற பீகாரின் முதல்வராக அவரால் ஜொலிக்க முடியவில்லை, வெள்ளையன் காலத்தில் கனிம உற்பத்தியில் நம்பர் 1 மாநிலம்தான் அது, ஆனால் அது முழு வளர்ச்சியினை கொடுக்கவில்லை அம்மாநிலம் சுரண்டபட்டது, அதன் தன்மை அப்படி
கூடவே திடீர் வெள்ளம் இன்னும் ஏகபட்ட விஷயங்கள் பீகாரை பாதித்தன, லாலுவால் மிகசிறந்த பீகாரை உருவாக்க முடியவில்லை என்றால் நல்ல அரசியல்வாதியாக ஜொலித்தார்
காலம் அவரை ரயில்வே அமைச்சராக அமர்த்தியது, நம்புகின்றீர்களோ இல்லையோ இன்றுவரை ரயில்வே கண்ட மிகசிறந்த அமைச்சர் அவர்தான்
அவர்காலம் ரயில்வே துறையின் பொற்காலம், கடும் லாபம் உட்பட பலத்த வசதிகளுடன் ரயில்வே துறை புத்துயிர் பெற்றது
இன்று காணும் ரயில்வே மாற்றங்கள் எல்லாம் அவர் தொடங்கி வைத்தது, ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் அவரின் ரயில்வே சாதனை தனிபெரும் விஷயம்
இன்னொரு அரசியல்வாதி மோடி
பொதுவாக குஜராத்திகள் பொறுப்பானவர்கள் வியாபாரம் உற்பத்தி விவசாயம் என தொழிலில் கெட்டிக்காரர்கள்
இன்றல்ல அன்றே அப்படித்தான் ஏன், அந்த வாஸ்கோடமாகா தென்னாபிரிக்கா பக்கம் கண்ணை கசக்கி நின்றபொழுது ஒரு குஜராத்திய வியாபாரிதான் இங்கே அழைத்துவந்தான்
தமிழக செட்டியார் போல குஜராத்திய கடலோடிகளும் அப்பொழுதே பிரசித்தி
வாடியா முதல் இன்றைய அம்பானிவரை அப்படித்தான்
அப்படிபட்ட குஜராத்தில் அதாவது இயல்பிலே அலெக்ஸாண்டரின் புக்கிபுலேஸ் குதிரை போல நல்ல குதிரையில் சவாரி செய்தவர் மோடி
அவரை சிக்கலும் பெரும் முரண்பாடும் கொண்ட இந்தியாவின் பிரதமராக அமர்த்தியபொழுது அவரின் பல பலவீனங்கள் வெளிபட்டன
நிச்சயம் பெரும் சாதனை என சொல்ல அவரிடம் ஏதுமே இல்லை
நாம் சொல்லவில்லை, அவரே 5 ஆண்டு சாதனை என புல்வாமா, பாகிஸ்தான் என்றுதான் புலம்புகின்றார் என்றால் அவரின் சாதனை என்ன என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்
ஆனால் நொண்டி குதிரையான பீகாரில் சவாரி செய்தவர் தகுந்த வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிடைத்தபொழுது அசத்தினார்
ஆக மோடியா , லாலுவா யார் திறமையனவர் என பார்த்தால் லாலு நிச்சயம் ஒருபடி மேலானவராகவேதான் தெரிகின்றார்
