எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்
இறந்தோரை அடக்கம் செய்வது சாலசிறந்த தர்மம் என்றும், அனாதை பிணங்களை தகணமும் அடக்கமும் செய்வது மாபெரும் புண்ணியம் எனவும் எல்லா மதங்களும் போதிக்கின்றன
எந்த மதமும் அதற்கு விதிவிலக்கு அல்ல
ஒரு ஆன்மா வாழ்ந்துவிட்டு சென்ற கூட்டினை முறைப்படி மரியாதையாக அடக்கம் செய்வது மானிட தர்மம்
அந்த தர்மத்தை தன் சுதர்மமாக ஏற்று செயல்பட்டுகொண்டிருக்கின்றார் இந்த மனிதர், அவரை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்
ஏன் வணங்கினாலும் தகும்
அவரின் பணி இன்னும் சிறக்கட்டும், புண்ணியங்கள் அவருக்கு பெருகட்டும்
நல்ல வேளையாக இவர் திராவிட கும்பல் கண்ணில் படவில்லை பட்டிருந்தால் என்னாகும்?
“சூத்திரன் பிணத்தை தெருவிலே போடு, ஊர் எல்லையில் கழுகுக்கு போடு அதை தொடாதே எனும் பார்பானிய கொடுமைபடி தமிழகமே நாறிகிடந்தது
பெரியார்தான் சூத்திரன் உடலை அடக்கம் செய்யும் புரட்சியினை தொடங்கினார், அந்த புரட்சியின் தொடர்ச்சிதான் இந்த மனிதர்
திராவிடத்தால் அடக்கம் ஆனோம் உறவே”.. என கிளம்பியிருப்பார்கள்
இந்த பெருமகன் அவர்கள் கண்ணில் இருந்து தப்பி இருப்பது நல்லது
